The post மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். நிதி அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.
‘தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன்முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவிஸ், இணை தயாரிப்பு – M. செண்பகமூர்த்தி, R.அர்ஜீன் துரை, இயக்கம் – மகிழ் திருமேனி, இசை – அரோல் கரோலி, ஒளிப்பதிவு – K.தில்ராஜ், கலை – T.ராமலிங்கம், படத் தொகுப்பு – ஶ்ரீகாந்த் NB, பாடல்கள் – மதன் கார்க்கி, தயாரிப்பு நிர்வாகம் – E.ஆறுமுகம், விநியோக நிர்வாகம் – ராஜா.C, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).
மற்ற நடிகர், நடிகையர் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்தப் படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளரும், நாயகனுமான உதயநிதி ஸ்டாலின், நாயகி நிதி அகர்வால், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட பல தொழில் நுட்பக் கலைஞர்களும் பங்கு கொண்டனர்.
The post மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>The post மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் நவம்பர் 4-ல் துவங்குகிறது..! appeared first on Touring Talkies.
]]>இதுவரையிலும் 12 திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதியின் கடைசி திரைப்படம் ‘சைக்கோ’. மிஷ்கின் இயக்கிய இத்திரைப்படம் படைப்பு ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது.
இதன் பின்பு கே.எஸ்.அதியமானின் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும், மு.மாறனின் இயக்கத்தில் ‘ஏஞ்செல்’ படத்திலும் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
இதற்கிடையில் மூன்றாவதாக இப்போது இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
‘முன் தினம் பார்த்தனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் 5-வது திரைப்படம் இது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 4-ம் தேதி துவங்குகிறது.
இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம் சம்பந்தமான பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் நவம்பர் 4-ல் துவங்குகிறது..! appeared first on Touring Talkies.
]]>