Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் – Touring Talkies https://touringtalkies.co Thu, 10 Feb 2022 14:35:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png இயக்குநர் நெல்சன் திலீப்குமார் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் https://touringtalkies.co/rajinis-169-movie-produced-by-sun-pictures/ Thu, 10 Feb 2022 14:34:52 +0000 https://touringtalkies.co/?p=20643 நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியானது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய ‘டாக்டர்’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். ஒரு வீடியோவின் மூலம் […]

The post ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியானது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய ‘டாக்டர்’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார்.

ரஜினி - நெல்சன்

ஒரு வீடியோவின் மூலம் இந்த படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி மாஸாக அமர்ந்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். ரஜினியின் ரசிகர்கள் இந்தப் புதிய பட அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

The post ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் appeared first on Touring Talkies.

]]>
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது..! https://touringtalkies.co/doctor-movie-will-release-on-disney-hotstar-ott/ Tue, 29 Jun 2021 06:33:38 +0000 https://touringtalkies.co/?p=15855 நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாகக் கடைசியாக வந்த உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ‘டாக்டர்’ படத்தை சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனமும், தயாரிப்பாளர் கொடப்பாடி J.ராஜேஷ் அவர்களின் K.J.R. Studios நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.    இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகி பாத்திரத்தில் நடிக்க, வினய் ராய் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, மிலிந்த் சோமன், […]

The post சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாகக் கடைசியாக வந்த உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ‘டாக்டர்’ படத்தை சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனமும், தயாரிப்பாளர் கொடப்பாடி J.ராஜேஷ் அவர்களின் K.J.R. Studios நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.   

இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகி பாத்திரத்தில் நடிக்க, வினய் ராய் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, மிலிந்த் சோமன், அருண் அலெக்ஸாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசை – அனிருத், ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன், படத் தொகுப்பு – R.நிர்மல், உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், கலை இயக்கம் – D.R.K.கிரண். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநரான நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சென்ற வருடமே வெளியாகியிருக்க வேண்டிய இந்தத் திரைப்படம் கொரோனா லாக் டவுனால் தள்ளித் தள்ளிப் போய் இப்போது தியேட்டருக்கே வர முடியாத சூழலில் மாட்டிக் கொண்டது.

ஓடிடி தளத்திலாவது இதை வெளியிடலாம் என்று ஒரே நேரத்தில் பல்வேறு ஓடிடி தளங்களில் இத்திரைப்படத்தை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். அமேஸான் பிரைம் வீடியோவும், டிஸ்னி ஹாட் ஸ்டாரும் இந்தப் படத்தை வாங்கப் போட்டி போட்ட நிலையில் கடைசியாக டிஸ்னி ஹாட் ஸ்டாருக்கு இந்தப் படம் கிடைத்திருப்பதாக உறுதியானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஆகஸ்ட் மாதம் இத்திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

The post சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..? https://touringtalkies.co/actor-vijays-next-movie-title-was-beast/ Mon, 21 Jun 2021 13:46:16 +0000 https://touringtalkies.co/?p=15678 நடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படம் விஜய்யின் 65-வது படமாகும். விஜய்க்கு நாளை பிறந்த நாள் என்பதால் அதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று நேற்றைக்கே அறிவித்திருந்தார்கள். அதன்படி இன்றைக்கு இந்தத் தலைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தப் படத்திற்கு ‘டார்கெட்’ […]

The post நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படம் விஜய்யின் 65-வது படமாகும். விஜய்க்கு நாளை பிறந்த நாள் என்பதால் அதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று நேற்றைக்கே அறிவித்திருந்தார்கள்.

அதன்படி இன்றைக்கு இந்தத் தலைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தப் படத்திற்கு ‘டார்கெட்’ என்று பெயர் வைக்கப் போவதாக சில செய்திகளை இணையத்தில் கசிய விட்டிருந்தார்கள். ஆனால் இப்போது மாறுபட்ட ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.

தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’, ‘புலி’, ‘தெறி’, ‘பைரவா’, ‘மெர்சல்’, ‘சர்க்கார்’, ‘பிகில்’, ‘மாஸ்டர்’ என்று கவன ஈர்ப்புடன் கூடிய பெயர்களையே கடந்த சில படங்களுக்கு சூட்டி வந்த விஜய், இந்தப் படத்திலும் அதே மாதிரியான பெயரை ஆனால் ஆங்கிலத்தில் அப்படியே வைத்திருக்கிறார். ‘பீஸ்ட்’ என்றால் தமிழில் ‘மிருகம்’ என்று அர்த்தம். ‘மிருகம்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஆதி நடிப்பில் ஒரு படம் வெளியாகியிருப்பதால் அதே தலைப்பை வைக்க விருப்பமில்லாமல் ஆங்கிலப் பெயரையே வைத்து விட்டார்கள்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், கலை இயக்கம் – கிரண், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – ஜானி, உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், வி.சாய், ஒப்பனை – பி.நாகராஜன், வி.எஃப்.எக்ஸ் சூப்பர்வைஸர் – அற்புதராஜ், மக்கள் தொடர்பு – ரியாஸ் அஹமது, புகைப்படங்கள் – மானெக்சா, விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, நிர்வாகத் தயாரிப்பு – ஆர்.உதயகுமார், எழுத்து, இயக்கம் – நெல்சன் திலீப்குமார்.

இந்தப் பெயர் விஜய் ரசிகர்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதா, பிடிக்கிறதா.. பிடிக்கவில்லையா என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரியும்.

The post நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..? appeared first on Touring Talkies.

]]>
விஜய்யின் 65-வது படத்தின் தலைப்பு இதுவா…? https://touringtalkies.co/is-this-the-title-of-vijays-65th-film/ Thu, 17 Jun 2021 07:07:33 +0000 https://touringtalkies.co/?p=15587 நடிகர் விஜய் நடித்து வரும் 65-வது திரைப்படத்தின் பெயர் ‘டார்கெட்’ என்று சொல்லி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. விஜய்யின் 65-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா 2-வது அலை குறைந்த பின்னர் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு […]

The post விஜய்யின் 65-வது படத்தின் தலைப்பு இதுவா…? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் நடித்து வரும் 65-வது திரைப்படத்தின் பெயர் டார்கெட்’ என்று சொல்லி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

விஜய்யின் 65-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா 2-வது அலை குறைந்த பின்னர் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்தப் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. இந்த நிலையில் விஜய்யின் 65-வது படத்துக்கு டார்கெட்’ என்ற தலைப்பினை வைத்திருப்பதாகச் சொல்லி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் விஜய்யின் ரசிகர்கள் பரப்புரை செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்தத் தலைப்பை இதுவரையிலும் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸூம், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் உறுதிப்படுத்தவில்லை.

பொதுவாக விஜய் நடிக்கும் படங்களின் தலைப்பு மிகவும் முக்கியமான நாட்களில்தான் வெளியிடப்படும். அந்த வகையில் விஜய்யின் பிறந்த நாளான வரும் ஜூன் 22-ம் தேதியன்று அந்தப் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

The post விஜய்யின் 65-வது படத்தின் தலைப்பு இதுவா…? appeared first on Touring Talkies.

]]>
“டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை” – தயாரிப்பாளர் திடீர் அறிக்கை..! https://touringtalkies.co/producer-kjr-rajesh-statement-about-doctor-movie/ Wed, 12 May 2021 08:09:35 +0000 https://touringtalkies.co/?p=15032 நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தை ரம்ஜான் பண்டியன்று வெளியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், ‘டாக்டர்’ படம் திட்டமிட்டபடி ரிலீஸாக முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதையடுத்து இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் உலா […]

The post “டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை” – தயாரிப்பாளர் திடீர் அறிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தை ரம்ஜான் பண்டியன்று வெளியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், டாக்டர்’ படம் திட்டமிட்டபடி ரிலீஸாக முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதையடுத்து இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் உலா வந்தன. இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள், ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு படக் குழுவினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் குறித்து கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷ் இன்று காலை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “தினமும் டாக்டர்’ பட அப்டேட் கேட்டு பலரும் எங்களைத் தொடர்பு கொள்கிறார்கள். முழுப் படமும் முடித்து எங்களது கையில் தயாராக உள்ள நிலையில், கொரோனா காரணமாக அதை வெளியிட முடியாமல், பல பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளோம்.

படம் நல்லபடியாக வெளியாவதற்கு எனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். மறுபக்கம், கொரோனா இரண்டாவது அலையால் எனது சுற்றங்களையும், நண்பர்களையும் இழந்து கொண்டிருக்கிறேன்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில் டாக்டர்’ படத்தின் ரிலீஸ் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்…” என்று தெரிவித்துள்ளார்.

The post “டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை” – தயாரிப்பாளர் திடீர் அறிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் நெல்சனிடம் நடிகர் விஜய் சொன்ன அறிவுரை..! https://touringtalkies.co/actor-vijay-advice-to-director-nelson/ Sun, 24 Jan 2021 11:41:01 +0000 https://touringtalkies.co/?p=12404 ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தில் நடிக்கிருக்கிறார் நடிகர் விஜய். இந்தப் படத்தை நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தின் உருவாக்கத்திற்காக இயக்குநர் நெல்சனுக்கு, நடிகர் விஜய் சில அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறாராம். “படம் மொத்தமும் 55 நாட்களில் முடித்தே ஆக வேண்டும். சிவகார்த்திகேயன் படம் போல விட்டுவிட்டு இழுக்கக் கூடாது” என்பதை ஒரு கண்டிஷன்போல் சொல்லிவிட்டாராம் விஜய். […]

The post இயக்குநர் நெல்சனிடம் நடிகர் விஜய் சொன்ன அறிவுரை..! appeared first on Touring Talkies.

]]>
‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தில் நடிக்கிருக்கிறார் நடிகர் விஜய். இந்தப் படத்தை நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தப் படத்தின் உருவாக்கத்திற்காக இயக்குநர் நெல்சனுக்கு, நடிகர் விஜய் சில அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறாராம்.

“படம் மொத்தமும் 55 நாட்களில் முடித்தே ஆக வேண்டும். சிவகார்த்திகேயன் படம் போல விட்டுவிட்டு இழுக்கக் கூடாது” என்பதை ஒரு கண்டிஷன்போல் சொல்லிவிட்டாராம் விஜய்.

இதேபோல் நெல்சன் கொடுத்த முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துப் பார்த்துவிட்டு “இது விஜய் படம் மாதிரியிருக்கணும். அதுனால எனக்கு ஏற்றாற்போல் கொஞ்சம் கரெக்சன் பண்ணிக் கொண்டு வாங்க” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதேபோல் நெல்சன் செய்து கொண்டு வந்த கரெக்சன்களையும் பார்த்து “ஓகே” சொல்லிவிட்டாராம் நடிகர் விஜய்.

இனிமேல் ஆர்ட்டிஸ்ட் செலக்சன், ஷூட்டிங் லொகேஷன் தேர்வு மற்ற இத்யாதிகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு மார்ச் 15-க்குப் பிறகு அல்லது ஏப்ரல் துவக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

The post இயக்குநர் நெல்சனிடம் நடிகர் விஜய் சொன்ன அறிவுரை..! appeared first on Touring Talkies.

]]>