Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஆதார் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Thu, 29 Sep 2022 15:20:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஆதார் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு காரை பரிசளித்த ‘ஆதார்’ பட தயாரிப்பாளர் https://touringtalkies.co/aadhaar-producer-gift-car-to-director-ramkumar-palanikumar/ Thu, 29 Sep 2022 15:19:31 +0000 https://touringtalkies.co/?p=24739 நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத் தொகுப்பாளர் […]

The post இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு காரை பரிசளித்த ‘ஆதார்’ பட தயாரிப்பாளர் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.

‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத் தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிட்ட விநியோகஸ்தரான சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேசுகையில், ”இந்த ஆதார்’ படத்தினை இயக்கும் வாய்ப்பளித்த என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான சசிகுமார் அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘ஆதார்’ படத்தை பற்றி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியான அனைத்து விமர்சனங்களையும் வாசித்தேன். பார்த்தேன். பிரமித்தேன். இதன் காரணமாக எழுந்த உந்துதலால் நன்றி அறிவிக்கும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தேன்.

எனது 22 ஆண்டு கால திரையுலக பயணத்தில், உங்களுடைய விமர்சனமும், ஆதரவும், அன்பும் என்னை படைப்பாளியாக வளர்த்துக் கொண்டே வருகிறது. என்னுடைய ஐந்தாண்டு கால உழைப்பை ‘ஆதார்’ படத்தில் முதலீடு செய்திருக்கிறேன். இதனால் சிறிய அச்சமும் என்னுள் இருந்தது.

படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள், இது தரமான படைப்பு என அதன் தனித்துவத்தை அடையாளப்படுத்தி பாராட்டி, என்னை அடுத்த கட்ட இலக்கை நோக்கி பயணிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதும்போது எத்தகைய உணர்வுடன் எழுதினேனோ… அது துல்லியமாக விமர்சனத்தில் இடம் பெற்றிருந்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படைப்பாளிகளான நாங்கள் சில ஆண்டுகள் உழைத்து திரைக்கதை எழுதி, அதனை படைப்பாக வெளியிடுகிறோம். அதனை இரண்டு மணி நேரம் மட்டுமே பார்த்துவிட்டு, எப்படி இவ்வளவு துல்லியமாக விமர்சிக்க முடிகிறது என்ற ஆச்சரியம் என்னுள் இன்னும் இருக்கிறது.

பத்திரிக்கையாளர்களான திரை விமர்சகர்கள் தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு அல்லது நான்கு திரைப்படங்களைகூட பார்க்கிறீர்கள். அந்த நெருக்கடியான காலகட்டத்திலும், ‘ஆதார்’ போன்ற திரைப்படத்தின் உள்ளடக்கத்தை உட்கிரகித்து, அதனை நேர்மறையாகவும், விரிவாகவும், விவரிக்க முடிகிறது என்றால்.. உங்களுடைய எழுத்தை கண்டு எனக்குள் மிரட்சி ஏற்பட்டது.

குறிப்பாக இப்படத்தின் திரைக்கதைக்குள் மறைமுகமாக இடம் பெறும் ரவி என்னும் கதாபாத்திரம், யூசுப் பாய் எனும் அருண் பாண்டியனிடம் முதல் பாதியில் ஒரு காட்சியும், இரண்டாவது பாதியில் ஒரு காட்சியும் மட்டுமே இடம்பெற்றிருக்கும். உச்சகட்ட காட்சியில் அந்த கதாபாத்திரத்திற்குரிய வசனங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.

திரைக்கதைக்கு வலுவாக அமைந்திருக்கும் இந்தக் கதாபாத்திரங்களையும், விமர்சனத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்ததை பார்த்து வியந்தேன். பெருமிதமாகவும் இருந்தது.

ஏனைய திரைப்படங்களின் விமர்சனத்தை போல் அல்லாமல், ‘ஆதார்’ திரைப்படத்திற்கான விமர்சனங்கள் நன்றாக இருந்தன. இதனை தொகுத்து ஆல்பமாக வெளியிடலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது.

ஏனெனில் ‘ஆதார்’ திரைப்படத்தின் விமர்சனத்தில் இருக்கும் துல்லியமான விவரங்கள் இதற்கு முன் எந்த திரைப்படத்தின் விமர்சனத்திலும் இடம் பெறவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளரிடமும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களுக்கும் இது போன்ற விமர்சனங்கள் வந்ததில்லை.

இந்த ‘ஆதார்’ திரைப்படத்தின் உள்ளடக்கம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படக் கூடியத் தகுதி கொண்டது என்று கணித்து, அதனை பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதற்கு உதவி செய்ததுடன், எட்டிற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றதற்கு பங்களிப்பு செய்த அதன் ஒருங்கிணைப்பாளர் திவ்யா அவர்களுக்கும், படத்தின் வெற்றிக்கு தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

‘ஆதார்’ படத்தின் வெற்றியைப் பாராட்டி, அப்படத்தின் இயக்குநரான ராம்நாத் பழனிக்குமாருக்கு, தயாரிப்பாளர் திருமதி சசிகுமார் கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு காரை பரிசளித்த ‘ஆதார்’ பட தயாரிப்பாளர் appeared first on Touring Talkies.

]]>
தணிக்கை சான்றிதழ் பெற்றது ‘ஆதார்’ திரைப்படம் https://touringtalkies.co/aadhaar-movie-gets-censor-certificate/ Mon, 09 May 2022 08:38:46 +0000 https://touringtalkies.co/?p=21903 இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘U / A’ சான்றிதழை பெற்றிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான இந்த ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ […]

The post தணிக்கை சான்றிதழ் பெற்றது ‘ஆதார்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘U / A’ சான்றிதழை பெற்றிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான இந்த ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்தப் படத்தின் படத் தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கிறார்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தின் முன்னோட்டம் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

தற்போது இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, U / A சான்றிதழ் பெற்றிருக்கிறது.

விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எளிய மனிதர்களின் வலியை டிஜிட்டல் செல்லுலாய்டில் யதார்த்தமாக உணர்த்தியிருக்கும் ‘ஆதார்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

The post தணிக்கை சான்றிதழ் பெற்றது ‘ஆதார்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
“ஆதார்’ படத்தை பினாமி பெயரில் தயாரிக்கிறேனா..?” – மறுக்கிறார் நடிகர் கருணாஸ் https://touringtalkies.co/am-i-making-the-movie-aadhar-under-a-pseudonym-actor-karunas-denies/ Sun, 17 Apr 2022 09:40:57 +0000 https://touringtalkies.co/?p=21813 “ஆதார்’ படத்தைத் தான் நேரடியாகவோ, பினாமி பெயரிலோ தயாரிக்கவில்லை” என்று மறுத்திருக்கிறார் நடிகர் கருணாஸ். நேற்று முன்தினம் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார். அந்த விழாவில் நடிகர் கருணாஸ் பேசுகையில், “முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி. ஏனெனில் நான்தான் பினாமி பெயரில் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என தகவல்கள் பரவியிருக்கிறது. கூவம் என்றால் நாறும். அதிலும் கூவத்தூர் சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் […]

The post “ஆதார்’ படத்தை பினாமி பெயரில் தயாரிக்கிறேனா..?” – மறுக்கிறார் நடிகர் கருணாஸ் appeared first on Touring Talkies.

]]>
ஆதார்’ படத்தைத் தான் நேரடியாகவோ, பினாமி பெயரிலோ தயாரிக்கவில்லை” என்று மறுத்திருக்கிறார் நடிகர் கருணாஸ்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த விழாவில் நடிகர் கருணாஸ் பேசுகையில், “முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி. ஏனெனில் நான்தான் பினாமி பெயரில் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என தகவல்கள் பரவியிருக்கிறது.

கூவம் என்றால் நாறும். அதிலும் கூவத்தூர் சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் தவறு. அதே தருணத்தில் இவர்களை திருத்துவது என் வேலை அல்ல. அதற்கான கால நேரமும் எனக்கு இல்லை.

பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் ஆயிரம் பேர், ஆயிரம் விமர்சனத்தை முன் வைப்பார்கள். அதற்காக வருத்தப்பட்டு பதிலளிப்பதைவிட நடப்பதை எதிர்கொள்ள வேண்டும்.

ராம்நாத்தின் இந்த ‘ஆதார்’ படத்தின் கதையைக் கேட்டு, அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, தயாரிப்பாளர்கள் முதலீடு செய்துள்ளார்கள். அவருக்கும் அவருடைய துணைவியாருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் அமீர் அண்ணன் இந்த மேடையில் என்னை வாழ்த்திப் பேசியது மறக்க முடியாத தருணமாக நினைக்கிறேன். அமீர் இயக்கத்தில் உருவான ராம்’ படத்தில் நான்தான் நடிக்க ஒப்பந்தமானேன். இதற்காக சென்னை துறைமுகம்வரை சென்று போட்டோ சூட்டிலும் கலந்து கொண்டேன்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் நண்பர்களாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது நான் மூன்றாம் மனிதராக வேடிக்கை பார்த்திருக்க வேண்டும். ஆனால், சற்று உரிமை எடுத்துக் கொண்டு, உள்ளே புகுந்து சிலவற்றை பேசினேன். அது தவறாக முடிந்துவிட்டது.

உடன் இருந்தவர்களும் எனக்கு சரியான புத்திமதியை எடுத்துரைக்கவில்லை. இதனால் எனக்கு கிடைத்த வாய்ப்பு என்னைப் போன்ற மற்றொரு எளிய மனிதனுக்கு கிடைத்தது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். இயக்குநர் அமீருடன் பணியாற்றவில்லை என்ற வருத்தம் என்னுள் இருந்தது. ஆனால் இன்று அவர் என்னைப் பாராட்டி பேசியது. அதிலும் மறைந்த நடிகர் நாகேஷ் அவருடன் ஒப்பிட்டு பேசியது என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது.

இந்தப் படத்தில் பாரதிராஜாதான் நடிக்க வேண்டியதிருந்தது. ஆனால், அவர் நடிக்கவில்லை. இந்த தருணத்தில் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா சொன்ன ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது. ‘ஒரு நல்ல சினிமா தனக்கான தொழில் நுட்பக் கலைஞர்களையும், தனக்கான நடிகர்களையும் தானே தேடிக் கொள்ளும்’ என்பார். அது இந்தப் படத்தில் முழுமையாக நிறைவேறியது.

ஏராளமானவர்களுக்கு ‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் சிம்ரன்தான் நாயகி என தெரியாது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிம்ரனைத்தான் எனக்கு நாயகியாக அளித்தார்கள். ஆனால் நான் என் தகுதிக்கு சிம்ரன் வேண்டாம் என உறுதியாக கூறினேன்.

சிம்ரன் நடித்திருந்தால் இந்தப் படம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்காது. ஏனெனில், என்னைப் போன்ற கதாபாத்திரத்திற்கு ஆவரேஜான பெண்ணே அழகாக இருப்பார். அந்தக் கதைக்கு அவ்வளவு பெரிய நாயகியை நடிக்க வைத்தால், ரசிகர்களே சிம்ரன் ஓடி விடுவார் என்று நினைத்து விடுவார்கள். அதனால் சிம்ரன் வேண்டாம் என உறுதியாக முடிவெடுத்து, வேறு ஒருவரை நடிக்க வைத்தேன்.

இது எப்படி பொருத்தமான முடிவாக இருந்து படத்தை வெற்றி பெற செய்ததோ.. அதேபோல் இந்த படத்திலும் இந்த கதை தனக்கான நடிகர்களை தேர்வு செய்து கொண்டது.

‘சேது’ படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் அந்த படம் வெளிவருவதற்கு நான் கடுமையாக உழைத்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்தப் படத்தின் வெளியீட்டுக்காக உழைத்ததால், இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகனாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

22 ஆண்டுகளுக்கு முன் நந்தா’ படத்தின் படப்பிடிப்பை இங்குதான் அரங்கம் அமைத்து நடத்தினார்கள். ஆனால் இன்று இந்த இடம் வேறு ஒருவரின் கைகளுக்கு மாறிவிட்டது. ஆனால், 22 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்தில் நான் நடித்த ஒரு படத்தின் இசை வெளியீடு நடைபெறுகிறது என்றால், உண்மையிலேயே எனக்கு கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறேன்.

எனக்கு இருந்த சின்ன, சின்ன ஆசைகளை எல்லாம் இந்த சினிமாதான் நிறைவேற்றியது. அதனால் தற்போது எனக்கு யார் மீதும் பொறாமையோ.. மனவருத்தமோ கிடையாது.

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்தேன். லாபத்தையும் பார்த்தேன். நஷ்டத்தையும் பார்த்தேன். சினிமாவில் நான் நிறைய கஷ்டங்களும் லாபங்களும் தோல்விகளும் சந்தித்தாலும் சினிமா என்னை ஒருபோதும் கைவிடவில்லை. நான் சினிமாவுக்கு உண்மையாக இருந்தேன். அதனை அளவு கடந்து நேசித்தேன். நேசித்தும் வருகிறேன்.

இதுவரையிலும் சினிமாவுக்குள் இருந்து நீ என்ன சம்பாதித்தாய்..?” என்று யாராவது என்னைக் கேட்டால், “இந்த சினிமாவில் நான் ராம்நாத் என்ற ஒரு இயக்குநரை  நண்பராக சம்பாதித்திருக்கிறேன்…” என்று உறுதியாக சொல்வேன்…” என்றார்.

The post “ஆதார்’ படத்தை பினாமி பெயரில் தயாரிக்கிறேனா..?” – மறுக்கிறார் நடிகர் கருணாஸ் appeared first on Touring Talkies.

]]>
கருணாஸ் மீண்டும் நாயகனாக நடிக்கும் ‘ஆதார்’ திரைப்படம் துவங்கியது..! https://touringtalkies.co/actor-karunaas-acting-in-new-movie-aadhar-as-hero-starts-today/ Fri, 16 Jul 2021 05:04:24 +0000 https://touringtalkies.co/?p=16207 நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கருணாஸ் மீண்டும் நாயகனாக நடிக்கிறார். ‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘சாந்தமாமா’, ‘ரகளபுரம்’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் கருணாஸ். இதற்கிடையில் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், காமெடி நடிகராகவும் நடித்திருந்தார். கடந்த 5 வருடங்களில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால் அதிகமாகப் படங்களில் நடிக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் நாயகனாக நடிக்க வந்திருக்கிறார். இந்தப் படத்தை ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார். […]

The post கருணாஸ் மீண்டும் நாயகனாக நடிக்கும் ‘ஆதார்’ திரைப்படம் துவங்கியது..! appeared first on Touring Talkies.

]]>
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கருணாஸ் மீண்டும் நாயகனாக நடிக்கிறார்.

‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘சாந்தமாமா’, ‘ரகளபுரம்’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் கருணாஸ். இதற்கிடையில் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், காமெடி நடிகராகவும் நடித்திருந்தார்.

கடந்த 5 வருடங்களில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால் அதிகமாகப் படங்களில் நடிக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் நாயகனாக நடிக்க வந்திருக்கிறார்.

இந்தப் படத்தை ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார்.

இந்தப் புதிய படத்திற்கு ‘ஆதார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.  இந்த ‘ஆதார்’ படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்  அழகம்மை மகன் சசிகுமார் தயாரிக்கிறார்.

இதில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் அருண் பாண்டியன், வத்திக்குச்சி’ பட புகழ் திலீப், ‘பாகுபலி’ பட புகழ் பிரபாகர், நடிகை மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளை கவனிக்க, படத் தொகுப்பை ஜெய் மேற்கொள்கிறார். கலை இயக்குநர் பொறுப்பை ஜான் பிரிட்டோ ஏற்க, இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக ஏ.பி.ரவி பணியாற்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

The post கருணாஸ் மீண்டும் நாயகனாக நடிக்கும் ‘ஆதார்’ திரைப்படம் துவங்கியது..! appeared first on Touring Talkies.

]]>