Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
அதுல்யா ரவி – Touring Talkies https://touringtalkies.co Sun, 12 Dec 2021 10:56:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png அதுல்யா ரவி – Touring Talkies https://touringtalkies.co 32 32 முருங்கைக்காய் சிப்ஸ் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/murungaikkaai-chips-movie-review/ Sun, 12 Dec 2021 10:55:34 +0000 https://touringtalkies.co/?p=19803 1985-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ப்ராபர்ட்டி ‘முருங்கைக்காய்’. நடிகர் மற்றும் இயக்குநரான கே.பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலமாக தமிழகத்தில் பிரபலமாகி இப்போதுவரையிலும் வைரலாகவே இருக்கிறது இந்த முருங்கைக்காய். தற்போது அவரது மகனான சாந்தனுவின் நடிப்பில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படம் வந்திருப்பதால், படத்தில் A-டா கூட விசயங்கள் அள்ளித்தெளிக்கப்பட்டிருக்கும் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் எல்லாம் எதிர்பார்த்தார்கள் இப்படத்தை. சிப்ஸ் டேஸ்டாக இருக்கிறதா..? படத்தின் கதை…? ஹீரோ சாந்தனு, ஹீரோயின் அதுல்யா […]

The post முருங்கைக்காய் சிப்ஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
1985-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ப்ராபர்ட்டி ‘முருங்கைக்காய்’. நடிகர் மற்றும் இயக்குநரான கே.பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலமாக தமிழகத்தில் பிரபலமாகி இப்போதுவரையிலும் வைரலாகவே இருக்கிறது இந்த முருங்கைக்காய்.

தற்போது அவரது மகனான சாந்தனுவின் நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படம் வந்திருப்பதால், படத்தில் A-டா கூட விசயங்கள் அள்ளித்தெளிக்கப்பட்டிருக்கும் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் எல்லாம் எதிர்பார்த்தார்கள் இப்படத்தை. சிப்ஸ் டேஸ்டாக இருக்கிறதா..?

படத்தின் கதை…?

ஹீரோ சாந்தனு, ஹீரோயின் அதுல்யா இருவருக்கும் படத்தின் முதல் காட்சியிலே திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்ததும் வரும் “முதல் இரவு உங்களது வாழ்க்கையில் மிக முக்கியமானது…” என்று தம்பதிகள் இருவருக்கும் சொல்லப்படுகிறது. இதில்தான் ஒரு ட்விஸ்ட்…!

“எப்படியாவது இந்த முதல் நாளிலேயே இருவரும் தாம்பத்யத்தில் ஈடுபட்டே ஆக வேண்டும். அப்போதுதான் நம் குடும்பத்தில் வாரிசு பிறக்கும்…” என்று மணப்பெண் அதுல்யாவிடம் அவரது அத்தையான ஊர்வசி சொல்கிறார்.

ஆனால், சாந்தனுவின் தாத்தாவான பாக்கியராஜ், “நீ இன்றைய இரவில் மனைவியை நெருங்காமல் விரதம் இருக்கணும். அப்போதுதான் நம் பரம்பரைச் சொத்தான 300 கோடி ரூபாயை உனக்குத் தருவேன். இல்லையானால் சொத்து முழுவதும் அனாதை இல்லத்திற்குப் போய்விடும்…” என்கிறார்.

இதற்கிடையில் இந்த முதலிரவை எப்படியாவது நடக்க வைக்க வேண்டும். அதன் மூலம் ஆசிரமத்திற்குப் போகும் பணத்தில் நாமும் கொஞ்சம் கமிஷன் காசு பார்த்துவிட வேண்டும் என்று  பாக்யராஜின் மேனேஜரான மனோபாலா திட்டம் தீட்டுகிறார்.

மனோபாலா தனக்கு உதவிக்காக யோகிபாபுவின் உதவியை நாட.. அவர் அவருடைய மாமாவான அன்பு டிரெஸ்ட்டின் உரிமையாளரைப் பிடிக்க.. அவரோ ஊரின் பெரும் புள்ளியான படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரைப் பிடிக்கிறார்.

இப்படி இந்தத் தம்பதிகளுக்கு இன்றைய இரவில் தாம்பத்யம் நடக்குமா.. நடக்காதா.. என்பதை எதிர்பார்த்து ஒரு பெரிய கோஷ்டியே பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது.  

சாந்தனு விரதத்தை கடைபிடித்தாரா? இல்லை அதுல்யாதான் ஜெயித்தாரா? சொத்துக்காக அலையும் இந்தக் கூட்டத்தின் கதி என்ன? என்பதை எல்லாம் ஒரே இரவுக்குள் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குநர்.

மனைவி அதுல்யா நெருங்கும் போதெல்லாம் விலகி விலகி ஓடும் பரிதாபக் கணவனாக சாந்தனு நன்றாக நடித்துள்ளார். ஆசை இருந்தும் தாத்தாவின் வார்த்தைக்காக அவர் அதுல்யாவை தவிர்க்கும் காட்சிகள் எல்லாமே ரசனை. 

கணவனை வசப்படுத்தி முதல் நாள் முதலிரவை வெற்றிகரமாக நடத்தும் வேட்கையில் அதுல்யா திரையில் அதகளப்படுத்தி இருக்கிறார். பல இளைஞர்களை தூக்கமின்றி தவிக்க வைக்கும் அளவுக்கு தன்னுடைய ரியாக்‌ஷன்களால் வெளுத்துக் கட்டியிருக்கிறார். கணவன், மனைவி கெமிஸ்ட்ரி பக்காவாக வொர்க் கவுட் ஆகியிருப்பது இந்தப் படத்தின் பலம்.

யோகிபாபு படம் நெடுக வந்தாலும் ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். நடிகராக அறிமுகம் ஆகியிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரனின் நடிப்பு ஓரளவு ஓ.கே. அடுத்தடுத்தப் படங்களில் அவர் மெருகேற வாய்ப்பு இருக்கிறது.

மனோபாலா, மயில்சாமி, மதுமிதா என படத்தை ரசிக்க வைக்க சிரிக்க வைக்க நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் சிரிப்புதான் வரவில்லை.

படத்தின் பின்னணி இசை சுமார் ரகம்தான் என்றாலும் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. முந்தானை முடிச்சு’ படத்தின் புகழ் பெற்ற பாடலான “கண்ணத் தொறக்கணும் சாமி” என்ற பாட்டையாவது இதில் ரிமேக்  செய்திருக்கலாம். இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.

ஒரு அறைக்குள்ளே நடக்கும் கதை என்பதால் கேமரா கோணங்களில் வித்தியாசம் காட்டி அழகுபடுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். வெளிப்புற பாடல் காட்.சிகளிலும், மாண்டேஜ் ஷாட்டுகளிலும் ஒளிப்பதிவு ஜலீர். அழகுப் பதுமையாக இருக்கும் அதுல்யாவை இன்னும் அழகாகக் காட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.

படத்தின் கதையோ அடல்ட் கதை என்பதால் படத்தில் நடித்த அத்தனை பேருமே இதற்காக இரட்டை அர்த்தத்தில் பேசியிருக்கிறார்கள். இது கொஞ்சம் ஓவராகவே போய் முகச் சுழிப்பு வரும் அளவுக்கு ஓவர் டோஸாகிவிட்டது.

கடைசியாக ஒரு குழந்தைக்காக சொத்துக்களை வேண்டாம் என்று சொல்லும் சாந்தனுவின் கொள்கைக்காக தாத்தா மனம் திருந்துவதெல்லாம் சீரியல் டைப் சென்டிமெண்ட் டிவிஸ்ட். இது சினிமாவுக்கு செட் ஆகாது.

அந்த ஒரே காரணத்துக்காக ஒட்டு மொத்தப் படத்தையும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. சுவையில்லாத திரைக்கதையால் படத்தின் வெற்றி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

RATINGS : 3 / 5

The post முருங்கைக்காய் சிப்ஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“முருங்கைக்காய் சீனை மூணு தடவை படமாக்கினேன்” – பாக்யராஜ் சொன்ன ரகசியம் https://touringtalkies.co/i-filmed-drumstick-scene-three-times-the-secret-told-by-bhagyaraj/ Tue, 14 Sep 2021 08:49:37 +0000 https://touringtalkies.co/?p=17909 ‘முந்தானை முடிச்சு’ படத்தில் இடம் பெற்ற முருங்கைக்காய் பற்றிய காட்சிகளை படமாக்கியவிதம் பற்றி இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்றைக்கு நடைபெற்ற ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். விழாவில் நடிகர், இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, “நம்ம தயாரிப்பாளர் ரவீந்தரை கூப்பிட்டு அவரது கஷ்டங்களை சொல்ல சொன்னால், எல்லோரும் சிரிக்கும்படி சுவாரஸ்யமாக சொல்வார்.  அவ்வளவு தடைகளை கடந்து வந்திருக்கிறார். தரண்தான் இன்றைய நாயகன். நான் அறிமுகப்படுத்திவர் ஜெயித்திருப்பது மகிழ்ச்சி. மயில்சாமி செய்யும் தர்மம் இங்கே பேசப்பட்டது மகிழ்ச்சி. […]

The post “முருங்கைக்காய் சீனை மூணு தடவை படமாக்கினேன்” – பாக்யராஜ் சொன்ன ரகசியம் appeared first on Touring Talkies.

]]>
முந்தானை முடிச்சு’ படத்தில் இடம் பெற்ற முருங்கைக்காய் பற்றிய காட்சிகளை படமாக்கியவிதம் பற்றி இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்றைக்கு நடைபெற்ற ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

விழாவில் நடிகர், இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, “நம்ம தயாரிப்பாளர் ரவீந்தரை கூப்பிட்டு அவரது கஷ்டங்களை சொல்ல சொன்னால், எல்லோரும் சிரிக்கும்படி சுவாரஸ்யமாக சொல்வார்.  அவ்வளவு தடைகளை கடந்து வந்திருக்கிறார்.

தரண்தான் இன்றைய நாயகன். நான் அறிமுகப்படுத்திவர் ஜெயித்திருப்பது மகிழ்ச்சி. மயில்சாமி செய்யும் தர்மம் இங்கே பேசப்பட்டது மகிழ்ச்சி. மிர்ச்சி சிவாதான் டான்ஸில் எனக்கு குரு. அவர் நன்றாக காமெடி செய்கிறார்.

முருங்கைக்காய் சிப்ஸ்’ என்றவுடன் ‘முந்தானை முடிச்சு’ படத்தில் நான் எடுத்த, அந்தக் காட்சி எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. முருங்கைகாய் காட்சியை படமாக்க நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஏனோ மூட் வரவில்லை. அதனால் அந்தக் காட்சி சரியாக மனதில் வராமல் மூன்று முறைக்கு மேல் எடுத்தேன்.

இதேபோல் பரிமளம் வாந்தி எடுப்பதுபோல ஒரு காட்சியும் இருந்தது. அதன் பின்பு பரிமளத்தின் அப்பாவும், அம்மாவும் சீர் வரிசையோடு மகளைப் பார்க்க வருவார்கள். இந்தக் காட்சியும் எனக்கு அப்போது சரியாக மனதில் பிடிபடவில்லை. இதையும் ரொம்பவும் யோசித்து மூன்று முறைக்கு மேல் எடுக்க வேண்டும் என்று நினைத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு கடைசியாக எடுத்தேன்.

ஆனால், இப்போது இந்தக் காட்சிகள், இத்தனையாண்டுகள் கழித்தும் மறக்க முடியாத அளவுக்கு புகழ் பெற்றிருப்பதில் எனக்கு சந்தோஷம்தான்.

சாந்தனுவின் உழைப்பை அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சி. சாந்தனு நல்ல நண்பர்களை பெற்றிருப்பதுதான் எனக்கு பெரிய மகிழ்ச்சி.

இந்தப் படத்தின் நாயகியான அதுல்யா கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பதே முதலில் எனக்குத் தெரியாது. அவர் ஆங்கிலத்தில்தான் பேச போகிறார் என தவிர்த்துவிட்டேன். பின்னர் தெரிந்த பிறகு தமிழ் பேசும் பெண் இத்தனை தூரம் ஜெயித்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் நிறைய பாஸிட்வ் எனர்ஜி இருக்கிறது. அதற்காக கண்டிப்பாக அவர் ஜெயிப்பார்..” என்றார்.

The post “முருங்கைக்காய் சீனை மூணு தடவை படமாக்கினேன்” – பாக்யராஜ் சொன்ன ரகசியம் appeared first on Touring Talkies.

]]>
“கலை இயக்குநர் தயாரிப்பு செலவில் என்னை வைச்சு செஞ்சுட்டார்” – தயாரிப்பாளர் ரவீந்தரின் சுவாரஸ்ய பேச்சு https://touringtalkies.co/the-art-director-put-me-at-the-expense-of-the-production-producer-raveendrans-interesting-speech/ Tue, 14 Sep 2021 08:25:54 +0000 https://touringtalkies.co/?p=17906 “படத்தின் கலை இயக்குநர் தயாரிப்பு செலவில் கூட்டிவிட்டாலும் படத்தில் அத்தனையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் அவர் இவ்வாறு பேசினார். இந்த விழாவில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது, “எனது முயற்சிக்கு ஆதரவாக, பிஸியான இந்த நேரத்திலும் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஒவ்வொருவருக்கும் தனது படம் சத்யம் திரையரங்கில் இசை விழா நடக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும், கொரோனா காலத்தால் நடக்காமல், அது […]

The post “கலை இயக்குநர் தயாரிப்பு செலவில் என்னை வைச்சு செஞ்சுட்டார்” – தயாரிப்பாளர் ரவீந்தரின் சுவாரஸ்ய பேச்சு appeared first on Touring Talkies.

]]>
படத்தின் கலை இயக்குநர் தயாரிப்பு செலவில் கூட்டிவிட்டாலும் படத்தில் அத்தனையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் அவர் இவ்வாறு பேசினார்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது, “எனது முயற்சிக்கு ஆதரவாக, பிஸியான இந்த நேரத்திலும் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஒவ்வொருவருக்கும் தனது படம் சத்யம் திரையரங்கில் இசை விழா நடக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும், கொரோனா காலத்தால் நடக்காமல், அது போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நடப்பது மகிழ்ச்சி.

நான் நல்ல படங்களை எடுத்த தயாரிப்பாளர் இல்லைதான்.. ஆனால் நல்ல தயாரிப்பாளர். நான் யார் குடியையும் கெடுத்ததில்லை. என் வாழ்க்கை ’20/20′, ‘வனிதா’ என முடிந்துவிடும் என நினைத்தேன். அந்த வீடியோக்களை பார்த்த  இயக்குநர் என்னை இப்படத்தில் நடிக்க வைத்து விட்டார். என்னுடன் நடித்த அனைவரும் நிறைய ஒத்துழைப்பு தந்து நடிக்க வைத்தார்கள்.

யோகி பாபுவை அடிப்பது மாதிரி ஒரு காட்சி படத்தில் இருந்தது. அதில் நடிக்க நான்  நிறையவே யோசித்தேன், ஆனால், என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்கள்.

இங்கு வந்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஆரம்ப காலத்தில் நான் தயாரிப்பில் நிறைய இழக்காமல் இருக்க உதவினார்கள். என்னை காப்பாற்றியவர்கள் அவர்கள்தான். என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டைவிட அதிகமானது. ஆனால், படம் நன்றாக வந்துள்ளது. ஆர்ட் டைரக்டர் படத்தை நல்லா செய்ததைவிட என்னை வைத்து செய்ததுதான் அதிகம். ஆனாலும், படத்தை அழகாக கொண்டு வந்துவிட்டார்.

இயக்குநரின் பார்வையில் திருப்திகரமாக படம் வந்துவிட்டதா என்ற நோக்கில்தான் நான் படம் செய்கிறேன். அந்த வகையில் இந்தப் படம் எங்களுக்கு திருப்தியாக வந்திருக்கிறது. இந்தப் படம் பக்கா ஃபேமிலி எண்டர்டெயினர் படம். எல்லோரும் குடும்பத்துடன் வந்து சந்தோஷமாக பார்க்கலாம்…” என்றார்.

The post “கலை இயக்குநர் தயாரிப்பு செலவில் என்னை வைச்சு செஞ்சுட்டார்” – தயாரிப்பாளர் ரவீந்தரின் சுவாரஸ்ய பேச்சு appeared first on Touring Talkies.

]]>