Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
அஜய் பிரதீப் – Touring Talkies https://touringtalkies.co Mon, 17 Jan 2022 07:33:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png அஜய் பிரதீப் – Touring Talkies https://touringtalkies.co 32 32 எம்.ஜி.ஆரின் கனவை அவரது கதாநாயகியின் மகன் நிறைவேற்றுகிறார் https://touringtalkies.co/mgrs-dream-is-fulfilled-by-his-heroines-son/ Mon, 17 Jan 2022 07:31:57 +0000 https://touringtalkies.co/?p=20262 எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’, பிரபல ஒளிப்பதிவாளரும், ஆவணப் பட இயக்குநருமான அஜய் பிரதீப்பின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான செலவில் வெப் தொடராகவும், திரைப்படமாகவும் உருவாக உள்ளது. ஸ்ரீநிதி அஜய் தயாரிக்கும் இப்படத்தை எட்டர்னிட்டி ஸ்டார் மற்றும் எட்டர்னிட்டி மோஷன் கிராஃப்ட் ஹப் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. ‘ஜெனோவா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஓமனாவின் மகன்தான் இயக்குநர் அஜய் பிரதீப். இவரது தந்தையான கிருஷ்ணன், தமிழகத்தின் தலை சிறந்த புகைப்படக் […]

The post எம்.ஜி.ஆரின் கனவை அவரது கதாநாயகியின் மகன் நிறைவேற்றுகிறார் appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’, பிரபல ஒளிப்பதிவாளரும், ஆவணப் பட இயக்குநருமான அஜய் பிரதீப்பின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான செலவில் வெப் தொடராகவும், திரைப்படமாகவும் உருவாக உள்ளது.

ஸ்ரீநிதி அஜய் தயாரிக்கும் இப்படத்தை எட்டர்னிட்டி ஸ்டார் மற்றும் எட்டர்னிட்டி மோஷன் கிராஃப்ட் ஹப் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

‘ஜெனோவா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஓமனாவின் மகன்தான் இயக்குநர் அஜய் பிரதீப். இவரது தந்தையான கிருஷ்ணன், தமிழகத்தின் தலை சிறந்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவராவார். இவர் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். பழம்பெரும் ஒளிப்பதிவாளரான கே எஸ் பிரசாத்தின் உதவியாளராகப் பணி புரிந்துள்ள அஜய் பிரதீப், எண்ணற்ற விளம்பர படங்களையும் ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார்.

பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். அகில இந்திய அளவில் இந்தப் படம், ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

வெப்சீரிஸ் 12 சீசன்களில் 153 எபிசோட்களைக் கொண்டிருக்கும். இரண்டு வருடங்களில் மூன்று பாகங்களாக இப்படம் வெளியாகவுள்ளது. வெளிநாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளது.

படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, சாபு சிரில் கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார். படத் தொகுப்பு பணிகளை ஆண்டனி செய்யவுள்ளார். பாகுபலி’ புகழ் விஸ்வநாத் சுந்தரம் மற்றும் சண்முகவேல் ஆகியோர் ஓவிய சித்திரங்களை வடிவமைக்கின்றனர்.

“எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான இன்று இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம்…” என்று இயக்குநர் அஜய் பிரதீப் கூறினார்.

எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யும்விதமாக, மூன்று போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய லட்சிய கதாபாத்திரங்களான அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் வேடங்களில் இந்த போஸ்டர்களில் அவர் இடம் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற எழுத்தாளரான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் இந்த பிரம்மாண்ட படைப்பு அர்ப்பணிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான எம்ஜிஆர் மற்றும் கலைஞரை இயக்குநர் அஜய் பிரதீப் தனது மானசீக குருவாக நினைப்பதால் இந்தப் படைப்பை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறார்.

படத்தைப் பற்றிய கூடுதல் அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

The post எம்.ஜி.ஆரின் கனவை அவரது கதாநாயகியின் மகன் நிறைவேற்றுகிறார் appeared first on Touring Talkies.

]]>