Touring Talkies
100% Cinema

Wednesday, December 10, 2025

Touring Talkies

சூப்பரான ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக சூர்யா 46 இருக்கும் – இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி, தற்போது சூர்யா நடித்திருக்கும் 46வது திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ், இந்த படம் தொடர்பாக சமீபத்தில் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அதில், இப்படம் குடும்ப உணர்வுகளைக் கலந்த ஒரு முழுக்க முழுக்க கமர்ஷியல் கதையாக உருவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தெலுங்கில் திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த ‘அல வைகுந்தபுரம்’ படத்தை போன்று இந்த படமும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பும் வெங்கி அட்லூரி இயக்கிய ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய இரு படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News