Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

டிசம்பரில் ரிலீஸாகிறது சூது கவ்வும் 2… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்… #Soodhu Kavvum 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன் , ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சூது கவ்வும். இப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக மாறியது.

குறிப்பாக படம் முழுக்க முழுக்க டார்க் காமெடி சப்ஜெக்ட்டில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியானதும் படத்தின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தெரிவித்துள்ளது.

சூது கவ்வும் என்றாலே அனைவருக்கும் விஜய் சேதுபதிதான் நினைவுக்கு வருவார். அப்படி இருக்கும்போது இந்த படத்தில் நடிகர் மெர்ச்சி சிவா நடிக்கிறார். அதேபோல் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது படம் வரும் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News