சாகுந்தலம் படத்தின் தோல்வியால், நாயகி சமந்தா மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாகவும் சிறிது நாள் தனது செல்போனை கூட அணைத்து வைத்து இருந்ததாகவும் பலர் கூறி வந்தனர். இப்படி இருந்ததாகவும் நிலையில் சாகுந்தலம் படத்தின் வசூல் குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் சுசகமான பதவி ஒன்றை போட்டு இருக்கிறார்.
அந்த பதிவில் ‘உங்கள் வேலையை நீங்கள் செய்து கொண்டே இருங்கள். உங்கள் கடமையை நீங்கள் செய்தால் மட்டும் போதும். அந்த வேலைக்கு பலன் வரும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்று குறிப்பிடுவது போல சமஸ்கிருத வரிகளை பதிவிட்டுள்ளார் சமந்தா.
இந்த பதிவை பார்த்த பலர் சாகுந்தலம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் சமந்தா இப்படி பதிவிட்டுள்ளார் என்று கூறி வருகின்றனர்