Friday, April 12, 2024

சிவகார்த்திகேயனுடன் ஆடவிருக்கும் சாய் பல்லவி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 21-வது படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடிக்கவுள்ளார். இதனை, அந்தப் படக் குழு நேற்றைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

’டாக்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டான்’ வரும் மே 13-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து, தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஜதி ரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயேன்.

இப்படத்தினை முடித்த பிறகு, நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கும் தனது 21-வது படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்றைக்கு சாய் பல்லவி தனது 30 வது பிறந்த நாளைக் கொண்டாடுவதையொட்டி இந்த அறிவிப்பு வெளியானது.

கமல்ஹாசனுடன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துகளோடு இந்த அறிவிப்பையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

சமீபத்தில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவின் நடிப்பும் கவனம் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘கார்கி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

- Advertisement -

Read more

Local News