Friday, April 12, 2024

“தமன்னா அவ்ளோ கலரு..” – ராதாரவியின் கிண்டல் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

The Nightingale production நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் டி.சமய முரளி இயக்கியுள்ள படம் கனல்’.

இந்தப் படத்தில் காவ்யா பெல்லு, ஸ்ரீதர் மாஸ்டர், ஸ்வாதி  கிருஷ்ணன், ஜான் விஜய்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – The Nightangle Production, எழுத்து, இயக்கம் – சமய முரளி, இசை -தென்மா  & சதிஷ் சக்ரவர்த்தி, ஒளிப்பதிவு – பாஸ்கர், பத்திரிகை தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்ரு மாலை சென்னை, பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது, “என் சினிமா கேரியரில் நான் முதன்முதலில் கன்னட படத்தில்தான் நடித்தேன். கமல்தான் இங்கு ‘மன்மத லீலை’ படத்தில் என்னை சிக்க வைத்தார். ஸ்ரீதர் ஆடினாலே நல்லாருக்கும். அதேபோல் வேல்முருகன் மாரியாத்தாளுக்கு என்றே இருக்குற ஆள். நல்லா பாடுவார். வேல்முருகன் பாட்டு எனக்கு எப்பவுமே பிடிக்கும். வேல்முருகன் மனசுல இருந்து பாடிருக்கார். மெட்ராஸ் கானா பாடல்களை  மேடையில் அழகாக பாடிய தம்பிகளுக்கு ஹேட்ஸ் ஆப்!

கானா கும்பலோட எல்லாம் சுத்துனவன்தான் நான். ஆனால் இந்தப் பசங்க நல்லா பாடினாங்க. தென்மா எக்ஸ்லண்டா மியூசிக் பண்ணிருக்கார். சதிஷும் மியூசிக் பண்ணிருக்கான். கேமராமேன் நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கார்.

சமய முரளி இந்தப் படத்தின் கதையைச் சொன்னார். அருமையாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை நாம் குட்ட குட்ட அவர்கள் சிலிர்த்தெழுவார்கள். இயக்குநர் இப்படியொரு கதையை எடுத்ததுக்கு ஹேட்ஸ் ஆப்.

சிலர் “நான் கீழ இருந்து வந்தேன். அதனால் இப்படி படம் எடுத்தேன்” என்பார்கள். ஆனால் சமய முரளி  மேலே இருந்து வந்தவர். இப்பலாம் யார், யார்லாமோ நடிக்க வந்துட்டாங்க. சனியன் நானூறு படம் நடிச்சிட்ட பிறகும் நானே சிலரிடம் “நான் நல்லா நடிப்பேன்”னு சொல்ல வேண்டியிருக்கு.

எல்லாரும் ஓடிடி ன்னு சொல்லிட்டிருக்காங்க. எல்லா பெரிய ஹீரோக்களுக்கும் சொல்றேன். இப்பம் கொடுப்பான் ஓடிடி. பிறகு அவனே பிக்ஸ் பண்ணுவான். படம்னா தியேட்டர்லதான் பார்க்கணும்.

இந்தக் கனல் படத்தை நான் பார்க்காமலே பேச முடியும். இயக்குநரிடம் கனலா அனலா என்ன? என்று கேட்டேன்.

நடிகை தமன்னாவைப் பார்த்தபோது நான் பெரிதும் வியந்தேன். அந்தப் பொண்ணை சுத்திச் சுத்தி வந்து பார்த்தேன். ஒரு இடமும் கருப்பும் இல்ல. இந்தப் பொண்ணு காவ்யாவும், தமன்னா போல அவ்ளோ கலரு. நல்லா நடிச்சிருக்கு பொண்ணு. நல்லாவும் தமிழ் பேசினாங்க. புரொடக்சன்ல இருந்தேன்னு சொன்னது ஆச்சர்யம்.

அற்புதமான குருப் இது. சினிமாவைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையாக இருங்கள். சினிமாவில் ஒற்றுமைதான் முக்கியம். கமல் எவ்வளவு திறமைக்காரர் பாருங்க. இந்த நேரத்துலயும் நம்பர் ஒன் கலெக்‌ஷனை எடுத்தான் பாருங்க. அதான் திறமை. கீழ இருக்கவனை பத்தி படம் எடுக்குற சமய முரளி மனசுக்கு இந்தப் படம் பெரிதாக ஹிட் ஆகும்” என்றார்.

- Advertisement -

Read more

Local News