அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் இந்தியில் மட்டும் கிட்டத்தட்ட 1000 கோடிகள் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. படம் ரூபாய் 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், படம் உலகம் முழுவதும் ரூபாய் 1871 கோடிகள் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்மாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது மட்டும் இல்லாமல் படத்திற்கு ஓடிடி, ஆடியோ ரைட்ஸ் என அவற்றையும் கணக்குப் பார்த்தால் படத்தின் மொத்த வருமானம் ரூபாய் 2,400 கோடிகள் வரையில் பிசினஸ் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
