Friday, April 12, 2024

‘பசங்க’ ஸ்ரீராம்-ப்ரீத்தி நடிக்கும் புதிய திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

JFL புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.  

இந்தப் புதிய படத்தை பிரபு தேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கலைமாமணி இயக்குகிறார்.

இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் நாயகனாக ஸ்ரீராம் நடிக்கிறார். இவர் ‘பசங்க’, ‘கோலி சோடா’ போன்ற படங்களில் நடித்தவர். முக்கிய வேடத்தில் ப்ரீத்தி நடிக்கிறார். இவர் இதே நிறுவனம் தயாரிக்கும் ‘லாகின்’ படத்திலும் நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான ‘தேனான்டாள் பிலிம்ஸ்’ முரளி, ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் ரத்ன சிவா, டான்ஸ் மாஸ்டர் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பேமிலி டிராமாவாக உருவாகும் இப்படம் ரசிகர்களுக்கு நெகிழ வைக்கும் அனுபவம் தரும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News