Friday, April 12, 2024

மலையாள திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்காக புதிய திரைப்படம் துவங்கவிருக்கிறது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத் திரையுலகத்தின் எழுத்தாளர்கள் சங்கத்தின் நலனுக்காக புதிய படம் ஒன்றை உருவாக்கப் போவதாக எழுத்தாளர் சங்கத்தை உள்ளடக்கிய பெப்கா அமைப்பு அறிவித்துள்ளது.

மலையாள திரைப்பட தொழிலாளர்களுக்கான அமைப்பு பெப்கா. இந்த அமைப்பில் 19 சங்கங்கள் இணைந்துள்ளன. இந்த சங்கங்கள் அனைத்திற்கும் தாய்ச் சங்கமாக எழுத்தாளர் சங்கத்தை அனைவரும் கருதுகின்றனர்.

இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக காலமானபோது அவர்களுக்கு நிதியுதவியை வழங்க முடியாத சூழலில் அந்தச் சங்கம் பொருளாதாரச் சிக்கலில் இருந்தது.

இதனால் அந்தச் சங்கத்திற்கு நிதி திரட்டித் தரும் பொருட்டு ஒரு புதிய திரைப்படத்தை உருவாக்குவதாக பெப்கா அமைப்பு முடிவெடுத்தது. இதேபோல் மலையாள இயக்குநர்கள் சங்கமும் தங்களது சங்கத்தின் நலனுக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கப் போவதாக அறிவித்தது.

ஆனால் இந்தப் போட்டியில் தற்போதைக்கு எழுத்தாளர்கள் சங்கம் முந்திக் கொண்டுவிட்டது. இந்தப் புதிய படத்தின் கதை, திரைக்கதை, வசனம் முழுவதும் தயாராகிவிட்டதாம். இதனை இந்துகோபன் எழுதியிருக்கிறார். இயக்குநர் வேணு இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இது முழுக்க, முழுக்க கமர்ஷியல் கலந்த திரைப்படமாம்.

இந்தப் படத்தில் பிருத்விராஜ், மஞ்சு வாரியார், ஆசீப் அலி, அன்னா பென் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

இந்த நடிகர், நடிகைகள் கொடுத்துள்ள தேதிகள் கொரோனா தாக்கம் முடிந்த பின்பு படத்தைத் துவக்குவது போல் உள்ளதாம். எப்படியும் இந்த ஆண்டின் இறுதியில் இத்திரைப்படம் துவங்கும் என்கிறார்கள்.

இந்தப் படத்தை ஒரு முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தயாரிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வருபவர் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு முன் வைப்புத் தொகையை செலுத்த வேண்டுமாம்.

இந்தப் படத்திற்கு மலையாள நடிகர் சங்கம் தன்னுடைய முழு ஒத்துழைப்பு வழங்கவிருக்கிறது.

ஏற்கெனவே மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் நிதி தேவைக்காக ‘டிவென்ட்டி டிவென்ட்டி’ என்ற படத்தை நடிகர் திலீப் முன்னின்று தயாரித்தார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

அந்தப் படத்தின் மூலம் கிடைத்த தொகையை வைத்துத்தான் இப்போது நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் அந்தச் சங்கத்தினர் நிதியுதவியை வழங்கி வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News