Friday, April 12, 2024

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குர் அருண்ராஜா காமராஜின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திற்கு நெஞ்சுக்கு நீதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

Zee Studios மற்றும் போனி கபூரின்  Bayview Projects நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.  

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இசை – திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன், படத் தொகுப்பு – ரூபன், கலை – வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா, சண்டை இயக்கம் – Stunner சாம், எழுத்து-இயக்கம் – அருண்ராஜா காமராஜ்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்க இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில் தற்போது நெஞ்சுக்கு நீதி’ என இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.

ROMEO PICTURES நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடவுள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News