Friday, April 12, 2024

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘Walking/Talking Strawberry Ice Cream’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாவின் நீண்ட நாள் காதலர்களான நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தங்களது Rowdy Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அடுத்தப் படமாக ‘Walking/Talking Strawberry Ice Cream’ எனும் ரொமான்ஸ் திரைப்படத்தினைத்  தயாரிக்கிறார்கள்.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் இணைந்து உருவாக்கியுள்ள Rowdy pictures என்ற தயாரிப்பு நிறுவனம்,  ஆரம்பிக்கப்பட்ட  மிகக் குறுகிய  காலத்தில், தமிழ் சினிமாவில் பலரது புருவத்தையும் உயர்த்தும் அளவில் பல ஆச்சரியமான அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது.

ஒரு புறம் ‘ராக்கி’ மற்றும் ‘கூழாங்கல்’ போன்ற அழுத்தமான தீவிர சினிமாக்களின் உரிமையைப் பெற்று உலகளவில் எடுத்து செல்லும் பணியினை செய்து வருகிறது.

மற்றொருபுறம் ரசிகர்களை மயக்கும் கமர்ஷியல் சினிமாக்களாக ‘நெற்றிக்கண்’,’ ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படங்களையும் உருவாக்கி வருகின்றது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக  இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் ‘நானும் ரௌடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய  வினாயக்  அவர்களின் அறிமுக இயக்கத்தில் ‘Walking/Talking Strawberry Ice Cream’ எனும் ரொமான்ஸ் திரைப்படத்தை உருவாக்குகிறது.

இப்படம் முழுக்க, முழுக்க காதலை மையப்படுத்தி, காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு வரும் 2021 ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் குழுவினர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

- Advertisement -

Read more

Local News