Friday, April 12, 2024

‘முருங்கைக்காய்’க்கு இவ்ளோ அக்கப்போரா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழகத்தின் சமையல் கலையில் ‘முருங்கைக்காய்’க்கு பல தலைமுறைகளை செல்வாக்கு இருந்தாலும் ‘முந்தானை முடிச்சு’ படம் வந்தததற்குப் பிறகு அந்த மவுசு பல மடங்கு ஏறியது.

ஆண்மைத் திறனை முருங்கைக்காய் அதிகப்படுத்தும் என்று ‘முந்தானை முடிச்சு’ படத்தில் ஒரு வசனத்தை வைத்திருந்தார் இயக்குநர் கே.பாக்யராஜ். அதிலிருந்து இந்த ‘முருங்கைக்காய்’ தமிழர்களின் சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

இருந்தும் இத்தனையாண்டுகளாக இந்த ‘முருங்கைக்காய்’ என்ற பெயர்ச் சொல்லை வைத்து எந்தத் திரைப்படமும் உருவாகவில்லை. இப்போதுதான் உருவாகியுள்ளது.

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சாந்தனுவும், அதுல்யா ரவியும் ஜோடியாக நடித்துள்ளனர். இயக்குநர் கே.பாக்யராஜூம் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்துவிட்டது.

இப்போது இந்தப் படத்துக்கு ஒரு சோதனை வந்துள்ளது. “இந்த ‘முருங்கைக்காய்’ என்ற பெயரை நாங்கள் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருக்கிறோம். எனவே இந்தப் பெயரைப் பயன்படுத்தி நீங்கள் படத்தைத் தயாரிக்கக் கூடாது.. வெளியிடவும் கூடாது…” என்று ஸ்ரீலட்சுமி சண்முகானாந்தம் என்ற தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஸ்ரீலட்சுமி சண்முகானாந்தம் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.எஸ்.மணிகண்டன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தைத் தயாரித்திருக்கும் லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இவ்வளவு சர்ச்சையைக் கிளப்பியதற்கு காரணமாக இருக்கும் அந்த முருங்கைக்காயில் ஆண்மைத் திறனை அதிகப்படுத்தும் சக்தியே இல்லை என்று மருத்துவர்கள் இப்போது உறுதியாகச் சொல்கிறார்கள்.

இல்லாத ஒன்றுக்கு இத்தனை அக்கப்போராய்யா..?!

- Advertisement -

Read more

Local News