Thursday, April 11, 2024

“ஹீரோவை கேள்வி கேளுங்க!” ஸ்ருதி காட்டம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருக்கிறார். அங்கு,

பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக வீர சிம்மா ரெட்டி படத்தி லும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக வால்டர் வீரய்யா படத்திலும் நடிக்கிறார்,

இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த நிலையில் அவரிடம், “பாலகிருஷ்ணா,  சிரஞ்சீவி ஆகியோர் பெரிய நடிகர்கள்தான். ஆனால் வயதான அவர்களுடன் ஜோடியாக நடிப்பது சங்கடமாக இல்லையா” என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், “நடிப்பில்  வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் உயிரோடு இருக்கும் வரை நடிக்கலாம்.

தவிர, ஏற்கனவே வயதான ஹீரோக்கள் பலர், தங்களை விட இரண்டுமடங்கு வயது குறைவான கதாநாயகிகளுடன் நடித்து நிரூபித்து இருக்கிறார்கள். இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல” என்றார்.

மேலும், “ இதே கேள்வியை ஏன் ஹீரோக்களிடம் யாரும் கேட்பதில்லை..” என்றும் காட்டமாக தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

Read more

Local News