Friday, April 12, 2024

‘மாஸ்டர்’ படத்தில் அரசியல் இருக்கா..? இல்லையா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தளபதி’ விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் “அரசியல் இல்லவே இல்லை…” என்கிறார் படத்தின் வசனகர்த்தவான ரத்னகுமார்.

‘மாஸ்டர்’ படத்திற்கு வசனம் எழுதியிருக்கும் ரத்னகுமார், ஏற்கெனவே ‘மேயாத மான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கியவர். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மிக நெருங்கிய நண்பரான இவர் லோகேஷின் வேண்டுகோளுக்கு இணங்க ‘மாஸ்டர்’ படத்திற்கு இணை கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார்.

‘மாஸ்டர்’ படம் பற்றி அவர் அளித்த பேட்டியில், “இதுல பிப்ட்டி பெர்சண்ட் விஜய் ஸாரோட பார்ட்டுலதான் என்னோட பங்களிப்பும் இருக்கு. என்னோட சேர்ந்து டயலாக் ரைட்டர் பொன்.பார்த்திபனும் வசனத்தை எழுதியிருக்கிறார்.

விஜய் ஸாரோட படங்கள்ல வசனங்கள் அவ்வளவு பவர்புல்லா இருக்கும். ரசிகர்களும் அப்படித்தான் எதிர்பார்ப்பாங்க. அரசியல் இருக்கான்னு தேடிப் பார்ப்பாங்க.

ஆனால், இந்தப் படத்தில் நாங்க அந்த வழக்கமான பாணிக்குள்ள போகாமலும், அதே நேரத்தில் அந்த வசனங்கள் கொடுக்குற கிக்கும் மிஸ் ஆகாம பார்த்துக்கிட்டோம். அந்த பவர்புல் கொடுக்குற பிரளயத்தை ஏற்படுத்த முயற்சி செஞ்சிருக்கோம்ன்னுதான் சொல்லணும். ரசிகர்களைக் குஷிப்படுத்துற ஒரு ஆக்சன் எண்ட்டெர்டெயின்மெண்ட்டரா இந்தப் படம் இருக்கும்.

படத்துல அரசியல் பத்தி, குடிபோதை பத்தி, தேர்தலோட அவசியம், ஏன் ஓட்டுப் போடணும்… இப்படி நாட்டுக்குத் தேவையான நல்ல விஷயங்கள் பலவற்றையும் விஜய் பேசியிருக்கார். ஆனால் எதுவும் நேரடியா ஆடியன்ஸை பார்த்து பேசுற சீன் இல்லை. கதையோட ஒரு கேரக்டர்கிட்ட பேசுற மாதிரி அமைஞ்சிருக்கும்…” என்றார் வசனகர்த்தா ரத்னகுமார்.

- Advertisement -

Read more

Local News