Thursday, April 11, 2024

விமர்சனம்: மாளிகப்புரம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கதை:

சிறுமி தேவநந் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க ஆசைப்படுகிறாள். அவளவது அப்பாவும், சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார். ஆனால் அவர், கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்கிறார்.

அதனால், தோழன் ஸ்ரீபத் உடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்பட்டுச் செல்கிறார் சிறுமி தேவநந்தா. அந்தப் பயணத்தில் அவர்களை ஆபத்து சூழ்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? என்பதைச் சொல்லியிருக்கும் படம் மாளிகப்புரம்.

விமர்சனம்:

கதையின் நாயகியான சிறுமி தேவநந்தா சிறப்பாக நடித்துள்ளார்.  குழந்தைகளுக்கான உற்சாகத்தை வெளிப்படுத்துவதோடு, குடும்ப நிலையை எண்ணி வருத்தப்படுவதையும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.


சிறுவன் ஸ்ரீபத்தும் இயல்பாக நடித்து கவர்கிறார்.

நாயகன் உன்னி முகுந்தன் சண்டைக்காட்சிகளில் மிரட்டுகிறார்.


நடிகர் சம்பத்ராம் வில்லனாக வந்து வழக்கம் போல் சிறப்பான நடிப்பை அளித்திருக்கிறார்.  


ரஞ்சன் ராஜாவின் இசை, விஷ்ணு நாராயணனின் ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு பலம்.


நடுத்தர வர்க்கக் குடும்பத்தை மையமாகக் கொண்டு ஒரு பக்தி படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர், பக்தி மட்டும் காப்பாற்றாது உழைப்புதான் காப்பாற்றும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அதுவும் பாராட்டுக்கு உரியது.

- Advertisement -

Read more

Local News