Friday, August 12, 2022
Home சினிமா செய்திகள் "கீர்த்தி ஷெட்டியிடம் மீரா ஜாஸ்மினின் சாயல் இருக்கு" - இயக்குநர் லிங்குசாமி பேச்சு

“கீர்த்தி ஷெட்டியிடம் மீரா ஜாஸ்மினின் சாயல் இருக்கு” – இயக்குநர் லிங்குசாமி பேச்சு

இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும்  அதிரடி திரைப்படம் ‘தி வாரியர்’.

Srinivaasaa Silver Screen சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்துரி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.

இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார்.  தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில்  இப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

படத்தின் வெளியீட்டினை ஒட்டி தமிழ் திரை பிரபலங்கள், படக் குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் சத்யம் திரையரங்கில் கோலகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் இயக்குநரான லிங்குசாமி பேசும்போது, “இங்கே என்னை மதித்து வந்திருக்கும் பல திரையுலகினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். திரைத்துறையில் பல நண்பர்களின் ஆதரவைப் பெற்றதை நான் பாக்கியமாக உணர்கிறேன்.

அருமையான பாடல் வரிகளை தந்த விவேகா அவர்களுக்கு எனது நன்றிகள். நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் மத்தியில் மிகச் சில படங்கள் மட்டுமே சரியான ஆற்றலைப் பெறுகின்றன.

ராம் சார் மற்றும் டிஎஸ்பி சாரின் எனர்ஜி லெவல்கள் இந்தப் படத்திற்கு சிறப்பாக இருந்ததால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது.

நதியா மேடத்துடன் பணிபுரிய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு, அது தற்போது சரியான திரைப்படத்தில் நடந்துள்ளது. கீர்த்தி ஷெட்டிக்கு மீரா ஜாஸ்மினின் சாயல்கள் உள்ளன, மேலும் அவர் திரைத்துறையை ஆள்வார் என்பது உறுதி. அவருடன் ஆரம்பத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பின்னர் குடும்ப நண்பர்களாகிவிட்டோம்.

இந்த படத்தில் ஆதி சார் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இதுவரை நான் செய்த படங்களில் நடித்த வில்லன்களியே சிறந்தவர் இவர்தான். அடுத்த ஆண்டு ‘சிறந்த வில்லன் பிரிவில்’ அதிக விருதுகளை ஆதி நிச்சயமாக வெல்வார்.

சீனிவாச சிட்தூரி  சார் போன்ற ஒரு தயாரிப்பாளரை நான் பெற்றது பாக்கியம். அவர் இந்தப் படத்தில் எந்த இடத்திலும் தலையிடவில்லை. இப்படத்திற்கு அதிக பணம் செலவழித்தார். இந்த திரைப்படத்திற்காக நான் முழு மனதுடன் உழைத்தேன், இப்படம் அவருக்கு நிச்சயமாக நல்ல லாபத்தை தரும்.

சண்டக்கோழி’, ‘பையா’ படங்கள் எப்படி அந்தப் படத்தின் நாயகர்களுக்கு  திருப்புமுனையாக அமைந்ததோ, அதுபோலவே ராமுக்கும் இந்த வாரியர்’ படம் அமையும். இதுவரை என்னுடன் பணியாற்றிய விக்ரம், மம்முட்டி சார், சூர்யா போன்ற எனது ஹீரோக்களின் கலவை அவர்.

இந்தப் படத்தை ஆதரித்த சிம்பு சார், சூர்யா சார் மற்றும் அனைவருக்கும் நன்றி. ‘புல்லட்’ பாடலை வெளியிட்டு இந்தப் படத்தை ஆதரித்த உதயநிதி சகோதரருக்கு நன்றி. நீங்கள் அனைவரும் இத்திரைப்படத்தை ஆதரித்து வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

நாளை ஓடிடியில் வெளியாகும் லெஸ்பியன் படம் ‘ஹோலி வுண்ட்’

சமீப காலமாக இந்தியாவில் LGBTQ கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இத்திரைப்படங்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கு...

‘சர்வம் தாள மயம்’ ஜப்பானிய மொழியில் வெளியாகிறது

நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில் இயக்குநர் ராஜீவ் மேனன் தயாரித்து, இயக்கியிருந்த ‘சர்வம் தாள மயம்’ படம் தற்போது ஜப்பானிய மொழியில் வெளியாகவுள்ளது. 2018-ம்...

5 நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்த ‘சீதா ராமம்’ படம்

துல்கர் சல்மான், ஹனு ராகவபுடி, வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’ வெளியான 5 நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

“சமந்தாவை நேரில் பார்த்தால்..?” நாக சைதன்யா சொன்ன பதில்

நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 3 வருடங்களாகக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின்பு 3 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் தற்போது பிரிந்து...