Friday, April 12, 2024

“மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப் பெரிய வெற்றியைுப் பெறும்…” – நடிகர் விஜய் ஆண்டனி வாழ்த்து

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத் தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் சிபிராஜ், நடிகை நந்திதா ஸ்வேதா, நடிகர் ஜெயப்பிரகாஷ், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பேசும்போது, “இந்தப் படத்தின் நாயகனான சிபி ரொம்பவும் இனிமையான மனிதர். மிகப் பெரிய நட்சத்திரன் மகன் என்ற அடையாளமே இல்லாமல் இருப்பார். நான் இசையமைப்பாளராக இருக்கும்போதே அவர் என்னிடம் ரொம்ப இயல்பாகவும் பழகுவார்.

இசையமைப்பாளர் சைமன் ரொம்ப நெருக்கமானவர், திறமையானவர். அவருக்கான உயரம் இன்னும் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக தெலுங்கிலும் அவர் அறிமுகமாகுகிறார். அதற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய முதல் படத்தின் கலை இயக்குநர் நிதேஷ், இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார், அவருக்கும்ம் எனது வாழ்த்துகள். எப்போதுமே எடிட்டர் பிரவீன் சாரின் பணி சிறப்பாக இருக்கும். அவருடைய கட்டிங்ஸை பார்த்து நான் ரசிப்பேன். அவரும் இந்த படத்தில் பணியாற்றியிருப்பது மகிழ்ச்சி.

படத்தின் இரண்டாவது ஹீரொ ஜே.எஸ்.கே. சார். நான் அவரை ரொம்பவும் ரசிப்பேன். ‘அக்னி சிறகுகள்’ படம் மூலம் அவருடன் நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ரொம்ப சிறந்த மனிதர். ரொம்ப இயல்பாக நடிக்க கூடியவர் ஜெயப்பிரகாஷ் சார். அவரை நான் எப்போதும் ஆச்சரியமாகவே பார்ப்பேன். ஒரு தயாரிப்பாளர் எப்படி இப்படி நடிக்கிறார் என்று வியந்து பார்த்ததுண்டு. படக் குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. ‘மாஸ்டர்’ போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். மற்ற நேரங்களில் என்றால்கூட பரவாயில்லை. ஆனால், இப்படி ஒரு கஷ்டமான காலக்கட்டத்தில் படங்களை பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது.

மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும், பெரிய படங்கள் போல சிறிய படங்களும் வெற்றி பெற வேண்டும். இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம்தான். நிச்சயம் தமிழிலும் மிகப் பெரிய வெற்றி பெறும்…” என்றார்.

சமீபத்தில் வெளியான ‘கபடதாரி’ படத்தின் டிரைலர் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றதோடு, மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் ஜனவரி 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News