Friday, April 12, 2024

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படம் காப்பியடிக்கப்பட்ட கதையில் உருவானதா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2019-ம் ஆண்டில் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதைக் களத்துடன் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’.

சூரஜ் வஜ்ரமூடு, செளபின் சாஹிர், சூரஜ் தெலக்காடு, ஷைஜூ குரூப் மற்றும் பலர் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநரான ரத்தீஷ் பாலகிருஷ்ணன் பொடுவாள் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.

எவ்வளவுதான் தொழில் நுட்பம் மெருகேறினாலும் இறுதியில் மனித நேயம்தான் மிஞ்சும் என்பதை எடுத்துக் காட்டிய படம் இது. 

படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலையும் வாரிக் குவித்தது. பல விருதுகளையும் இப்படம் வென்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த கலை இயக்குநருக்கான மாநில அரசின் விருதையும் இந்தப் படம் பெற்றுள்ளது.

இப்போது இந்தப் படம் காப்பியடித்து உருவாக்கப்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது.

“இந்தப் படம் 2012-ம் ஆண்டு ஷேக் ஷ்ரேயார் இயக்கத்தில், கிறிஸ்தோபர் போர்டின் கதையம்சத்தில் வெளியான அமெரிக்க திரைப்படமான ROBOT AND FRANK’ படத்தைக் காப்பியடித்துதான் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த ஆங்கிலப் படத்தின் பல காட்சிகளை ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்திலும் அப்படியே வைத்துள்ளனர்” என்றும் இந்த ஆங்கிலப் படத்தைப் பார்த்த சினிமா ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் படம் கேரள மாநில அரசின் 3 விருதுகளைப் பெற்றிருப்பதால் இது தொடர்பாக தீர விசாரணை நடத்தி அந்த விருதுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று சொல்லி கேரள மாநில கலாச்சாரத் துறை அமைச்சரான ஷாஜி செரியனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இப்படம் தற்போது தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் கூகுள் குட்டப்பன்’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News