நடிகை ஷோபனா தனது நடிப்புத் திறமையாலும், மேன்மையான கேரக்டர் செலக்ஷனாலும் 90களில் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம்) மட்டுமின்றி ஹிந்தி, ஆங்கிலப் படங்களிலும் தனித்துவமான இடத்தை பெற்றவர். தற்போது, குறிபிட்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த தொடரும் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் நடித்து வரும் ‘பெத்தி’ படத்தில் ஏற்கனவே சிவராஜ் குமார், ஜான்வி கபூர், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இப்போது இவர்களுடன் சேர்ந்து நடிகை ஷோபனாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இணைகிறார் என்று தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

