2010ஆம் ஆண்டு வெளியான ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கன்னட நடிகை மேக்னா ராஜ். பின்னர் ‘உயர்திரு 420’, ‘நந்தா நந்திதா’ போன்ற சில படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதே சமயம் நடிகர் அர்ஜுனின் சகோதரி மகன் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ரஞ்சீவி சார்ஜா காலமானார். தற்போது மேக்னா ராஜ்க்கு ராயன் ராஜ் சார்ஜா என்ற மகன் இருக்கிறார்.
இந்த சூழ்நிலைக்குப் பிறகும் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அவர், தற்போது 13 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎன்ட்ரி அளிக்கிறார். இதில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார், இப்போது மேக்னா ராஜும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

