2023ஆம் ஆண்டு வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்குப் பிறகு, “நாட்டின் பாதி பேர் என்னைக் கொல்ல விரும்பினர்; மற்ற பாதி பேர் என்னை காப்பாற்ற விரும்பினர்” என்று நடிகை அதா சர்மா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஒரு நேர்காணலில் அவர் கூறியதாவது: ஆபத்தான, சவாலான வேடங்களில் நடிக்கும்போதுதான் ஒரு நடிகரின் தொழிலுக்கு மதிப்பு கிடைக்கும். நான் 1920 திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தேன். அது எனது முதல் பெரிய சாகசம். தி கேரளா ஸ்டோரி வரை நான் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் வரும் வரை காத்திருந்தேன். அந்தப் படம் வெளியான பிறகு என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.
அதற்குப் பிறகு நான் நடித்த பஸ்டர்: தி நக்சல் ஸ்டோரி போன்ற படங்களின் போது கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டேன். நாட்டின் பாதி பேர் என்னைக் கொல்ல விரும்பினாலும், மற்ற பாதி பேர் என்னைப் பாராட்டி என்னை பாதுகாத்தார்கள். ஒரு கதாபாத்திரத்தில் உணர்ச்சி, ஆக்ஷன், அழுத்தமானதாக இருக்க வேண்டும். அந்த வேடம் என் குடும்பத்தினர் கவலைப்படும் அளவுக்கு தீவிரமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தாக்கமுள்ள கூறுகள் இல்லையென்றால் அந்த கதாபாத்திரத்தை நான் ஏன் செய்ய வேண்டும்?என்று அவர் தெரிவித்தார்.

