நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் டி.சிவா சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்டார்:
“விஜயகாந்தை கடைசியா அவரோட பிறந்தநாள் அன்று பார்த்தேன். பார்க்காமலே இருந்திருக்கலாமேனு தோணுச்சு! மாவீரனா ரத்தத்திலேயே துணிச்சல் மிக்கவனா சிங்கம் மாதிரி உலா வந்தவன் விஜயகாந்த். அவன் நடக்கிறதே யானை வர்ற மாதிரி, கம்பீரமா இருக்கும்.
இப்போ, தான் யாருனு தெரியாம மத்தவங்க யாருன்னும் தெரியாம அவன் இருக்கிறதை பார்க்கவே பிடிக்கலை.. முடியலை.
சுவர் சுவரா ஏறி உதைச்ச கால் சூம்பிப்போயி கிடக்குது. அவனை பார்த்தாலே டிப்ரசன் வந்துடுது..” என்று நெகிழ்ச்சியாக தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..