Thursday, April 11, 2024

“நான் கமல் இல்லை!”: ரஜினி ஓப்பன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினி நடித்த முத்து உள்ளிட்ட பல படங்களில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றியவர் ஜவகர். இவர் முன்பு அளித்த பேட்டி ஒன்றில்  ரஜினி குறித்து தெரிவித்த சுவாரஸ்யமன தகவல்:

“முத்து படத்தில் ஒரு டான்ஸ் காட்சியின் போது டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்த டான்ஸ் மூவ்மெண்ட்டை ரஜினியால் செய்ய முடியவில்லை கஷ்ட்டப்பட்டார். மாஸ்டரிடம், “நான் கண்டக்டராக இருந்தவன் . ஏதோ கடவுள் கிருபையால் ஸ்டார் ஆயிட்டேன். கமல்ஹாசன் நன்றாக டான்ஸ் பண்ணக்கூடியவர் அவருக்கு இது போல மூவ்மெண்ட் கொடுத்தால் நியாயம்! எனக்கு கொடுத்து கஷ்டப் படுத்தறீங்களே’’ என்றார் சிரித்துக் கொண்டே.

மாஸ்டர் உடனே ‘இந்த ரிஸ்க் மூவ்மெண்ட் வேண்டாம். இன்னும் கொஞ்சம் ஈஸியான மூவ்மெண்ட் தருகிறேன்” என்றார்.

ரஜினி உடனே, “இல்லையில்லே.. நான் சும்மா சொன்னேன். எப்படியும் முயற்சி பண்ணி ஆடிடறேன்” என்று கூறிவிட்டு, அதே போல அந்த மூவ்மெண்ட்டை நன்றாக செய்தார்.

அவர் கண்டக்டராக இருந்த வாழ்க்கையை இன்னும் மறக்காமல் இருப்பதையும், அவருக்குப் போட்டி நடிகராகிய கமலஹாசனின் திறமையை மனதைர புகழ்ந்ததையும் கண்டு நான் வியந்துபோனேன்” என்றார் ஜவஹர்.

 

 

- Advertisement -

Read more

Local News