சினிமாவில் நடன இயக்குநராக பணிபுரிந்த வந்தவர் சுஜாதா. ‘ஈசன்’ படத்தில் ஹிட்டான ‘ஜில்லா விட்டு ஜில்லா’ பாடலில் நடனமாடி மிகவும் பிரபலமடைந்த இவர் சினிமாவிலேயே சிறு சிறு ரோல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கில்லி படத்தில் திரிஷாவுக்கு அம்மாவாக நடித்திருந்தவர் இவர் தான். தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவருக்கு மக்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் ஒரு வீட்டிற்கு சென்றபோது சிறகடிக்க ஆசை சீரியல் சிந்தாமணி நீங்கள் தானே என பலர் கேட்டனர். சிந்தாமணி கேரக்டர் கொஞ்சநாளிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணம் இயக்குநர் தான். வில்லியாக நடிப்பதால் சிலர் என்னை திட்டுவார்கள். சீரியலோ, சினிமாவோ கதாநாயகன், நாயகிக்கு பிறகு மக்களிடம் அதிகம் ரீச்சாவது வில்லன்கள் தான். அதனால் வில்லியாக நடிப்பது எனக்கு ஹேப்பி தான்” என அந்த பேட்டியில் சுஜாதா பேசியுள்ளார்.
