தமிழில் பேட்டா, மாஸ்டர் போன்ற படங்களின் மூலம் மலையாளத்திலிருந்து தமிழ்த் திரையுலகுக்கு வந்து தனக்கென ஒரு வலுவான இடத்தை உருவாக்கியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். தற்போது தெலுங்கில் பிரபாஸுடன் இணைந்து ‘ராஜா சாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் இருந்து ஓய்வு கிடைக்கும் வேளைகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி சமீபத்தில் பாரிஸுக்கு தனது தாயுடன் இணைந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் நினைவாக பல புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த அனுபவத்தைப் பற்றி அவர் கூறியதாவது, “பத்து வருடங்களுக்கு முன்பு நானும் என் அம்மாவும் பாரிஸுக்கு வந்திருந்தோம். ஆனால் அப்போது மழை சீசன் என்பதால் வெளியே செல்ல முடியாமல் இரண்டு நாட்கள் ஹோட்டலிலேயே இருந்தோம். அப்போது பாரிஸை சுற்றிப் பார்க்க முடியாதது என் அம்மாவுக்கு மனக்குறையாக இருந்து வந்தது. அதனால் இந்த முறை அவரை மீண்டும் அழைத்து வந்து, பல இடங்களை சுற்றி காட்டினேன். எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு இதுபோன்ற பயணங்களில் ஈடுபட தயங்குவதில்லை” என தெரிவித்தார்.

