Thursday, April 11, 2024

லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வை ராஜா வை படத்தை இயக்கினார். இதில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும், ப்ரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். படத்தில் தனுஷ் கொக்கி குமார் கதாபாத்திரத்தி சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். படம் அவ்வளவான வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த ஐஸ்வர்யா பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கினார். இந்த ஆல்பம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

இந்தச் சூழலில் தனுஷுடனான பிரிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த ஒரு முக்கிய ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுயடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி டிரெண்டாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News