Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

’ஜி ஸ்குவாட்’நல்ல படங்களை  மட்டுமே வழங்கும் – லோகேஷ் கனகராஜ்  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

’பைட் கிளப்’ திரைப்படத்தின் பத்திரைக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய லோகேஷ் கனகராஜ்…இந்தப்படம் மாநகரம் மாதிரி தான், எனக்கு இது ஒரு புதிய தொடக்கம். உங்கள் ஆசியோடு தொடங்க ஆசை. உறியடி விஜய் குமார், அவன் பேரும் என் பேரும் ஒரு படத்தில் ஒன்றாக வர வேண்டும் என்று 2017 லிலிருந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். அது இப்போது நடப்பது மகிழ்ச்சி. எனக்குத் தெரிந்த மிக நேர்மையான மனிதன் விஜய்குமார்.

எப்போதும் சினிமா பற்றி மட்டுமே சிந்திப்பவன், இந்தப்படத்தை நான் வெளியிடுவது, படக்குழுவிற்குச் செய்யும் நல்லதல்ல, நான் என் கம்பெனிக்கு செய்து கொண்ட நல்ல விசயம் அவ்வளவு தான். இந்தப்படத்தில் அத்தனை பேரும் அவ்வளவு  கடினமாக உழைத்திருக்கிறார்கள், விஜய் குமாரை தவிர இந்தப்படத்தில் பல புதுமுகங்கள் உழைத்துள்ளார்கள்.

படத்திற்குப் பிறகு எல்லோரும் பெரிதாகப் பேசப்படுவார்கள்.  நான் படம்  செய்ய ஆசைப்பட்ட போது என் நண்பர்கள் தான் பணம் போட்டு குறும்படம் எடுக்க வைத்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஏதாவது செய்வேன் என எவரும் நினைக்கவில்லை. எனக்காக மட்டுமே செய்தார்கள், அதே போல் நான்கு பேருக்கு நான் செய்ய வேண்டுமென நினைக்கிறேன், அவ்வளவு தான், அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம்.

ஜி ஸ்குவாட் நிறுவனத்தோட அபீசியல் பார்ட்னர்ஸ் ஜெகதீஷ் மற்றும் சுதன் இருவரும் தான். அவர்களுக்கு நன்றி.   நல்ல படங்களைத்தர இந்த நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் என்றார்.

- Advertisement -

Read more

Local News