மறைந்த நகைச்சுவை நடிகர் பாண்டு, சிறந்த ஓவியரும்கூட. சென்னை ஓவிய கல்லூரி மாணவரான பாண்டு தென்னிந்தியாவில் ஓவியத்தில் ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய ஒரே நபர்.
தன் மகன்கள் பிண்டு, பிரபு, பஞ்சு இவர்களுடன் இணைந்து நிறுவனங்களுக்கு பெயர் பலகைகளை வடிவமைத்து தரும் நிறுவனத்தை சென்னையில் நடத்தி வந்தார் பாண்டு.
இவரது சகோதரர் ‘இடிச்சபுளி’ செல்வராஜ் எம்.ஜி.ஆரிடம் உதவி இயக்குநராக இருந்தார். அவர் மூலமாக எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானார் பாண்டு. அதன் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த ‘குமரிக்கோட்டம்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய படங்களில் ஓவியங்கள் வரைந்து கொடுத்துள்ளார்.
எம்.ஜி.ஆர். அதிமுக கட்சி தொடங்கியபோது, ஓவியராக அதிமுகவின் கொடியை வடிவமைத்தவர் பாண்டுதான். எம்.ஜி.ஆர். கேட்டு கொண்டதற்கு இணங்க ஒரு மணி நேரத்திலேயே இரவில் கொடியை வடிவமைத்துள்ளார். அதேபோல, அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை வரைந்தவரும் இவர்தான்.
அதே போல தி.மு.க. தலைமை நிலையமான அண்ணா அறிவாலத்தை ஓவியமாக்கியவரும் இவர்தான். இந்த அனுபவத்தை அவர் கூறும்போது, “கலைஞர் என்னை அழைத்து, ஓவியம் எப்படி இருக்க வேண்டும் என்று விரிவாக கூறினார். அதன் எழுத்துக்கள் குறித்து பேச்சு வரும்போது, ‘ஃபாண்ட் எவ்வளவு பாண்டு’ என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான், ஃபாண்ட் ( எழுத்தின் அளவு உருவம்) என்ற வார்த்தையுடன் என் பெயரையும் சேர்த்து சிலேடையாக பேசி இருக்கிறார் என்பது புரிந்தது” என்று தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் பாண்டு.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்…
டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..