Friday, April 12, 2024

பிரபலங்கள் வெளியிட்ட ‘சாயம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’.

இந்தப் படத்தில் அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத் தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். புதுமுக இயக்குநரான ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை  தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் அமீர்,  சுசீந்திரன்,  சமுத்திரக்கனி, ராஜேஷ்,   சுப்ரமணிய சிவா மற்றும் எஸ்.ஆர்.பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர்.

தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. தற்போதைய லாக் டவுன் நிலைமை சீராவதை பொறுத்து படம் விரைவில் வெளியாகும்.

- Advertisement -

Read more

Local News