Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மும்பையில் பிரபல ஹிந்தி நடிகர் சைப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பந்த்ராவில் நடிகர் சைப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் தம்பதியர் வசித்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம்போல் சைப் அலிகான் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அதிகாலை 2.30 மணியளவில், திருடுவதற்காக அவரது வீட்டிற்குள் மர்ம நபர் புகுந்துள்ளார். சைப் அலிகானை கண்டதும், அந்த நபர் கத்தியால் குத்தி, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனடியாக, சைப் அலிகானை அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சைப் அலிகானுக்கு ஏற்பட்ட காயம் குறித்து மருத்துவர் கூறுகையில்: “அதிகாலை 3.30 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரது உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அதில், 2 இடங்கள் பலத்த காயமாக உள்ளது. முதுகு எலும்பு அருகே காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

- Advertisement -

Read more

Local News