Thursday, April 11, 2024

பிரபல நடிகருக்கு கண்டனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக விளங்குபவர் பாலகிருஷ்ணா. இவர் நடித்த, வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த இந்தத் திரைப்படம் தற்போதும் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டு இருக்கிறது.

 இந்த நிலையில், வீர சிம்ஹா ரெட்டி படத்தின் சக்ஸஸ் மீட், ஹைதராபாத்தில் நடந்தது. இதில், பாலகிருஷ்ணாவுடன், மலையாள நடிகை ஹனி ரோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் நேற்று வெளியானது. இதில், பாலகிருஷ்ணாவும் ஹனியும் ஸ்டைலாக ஷாம்பெயின் டோஸ்ட் செய்து பருகும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, “பாலகிருஷ்ணா ஒரு சீனியர் சிட்டிசன். தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அனைவருக்கும் நல்ல முன் மாதிரியாக இருக்க வேண்டிய இவர் நடிகையுடன் மது அருந்துவது சரியா.. அப்படியே அது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அந்த படத்தை சமூகவலைதளங்களில் வெளியிடலாமா… இது அவரைப் பின்பற்றும் இளைய சமுதாயத்தை தவறான வழிக்கு கொண்டு செல்லுமே’ என பலரும் சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News