Thursday, April 11, 2024

‘அந்தகன்’ படத்திற்காக ‘டோர்ரா புஜ்ஜி’ பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டாப் ஸ்டார் பிரஷாந்த் நடித்து வரும் ‘அந்தகன்’ திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குநருமான தியாகராஜன்.

படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட காட்சிக்காக ‘டோர்ரா புஜ்ஜி’ என்ற பாடலை ‘ராக் ஸ்டார்’ அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய சேதுபதி இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு ‘நடனப் புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்துத் தர இசைந்துள்ளார். பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பாடல் காட்சி படமான உடனே ‘அந்தகன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘அந்தகன்’ படத்தை கலைப்புலி S.தாணு அவர்கள் உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்.

- Advertisement -

Read more

Local News