ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தேரே இஷ்க் மெய்ன்’ படத்திலிருந்து வெளியான தேரே இஷ்க் மெயின்…’ என்ற பாடலை கடந்த அக்., 18ம் தேதியன்று யு-டியூப் தளத்தில் வெளியிட்டனர். அர்ஜித் சிங் இந்த பாடலை பாடி உள்ளார். இர்ஷாத் கமில் பாடல் வரிகளை எழுதி இருந்தார். காதலின் வலியை சொல்லும் விதமாக வெளியான இந்த பாடல் மூன்று வாரங்களை கடந்துள்ள நிலையில் 100 மில்லியன் பார்வைகளை, அதாவது 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.இதேப்போல் தமிழில் இந்தபாடல் ‛ஓ காதலே’ என்ற பெயரில் இருவாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அந்த பாடலுக்கு 5.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more

