Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
திரை விமர்சனம் – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Apr 2024 09:35:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png திரை விமர்சனம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 எப்படி இருக்கு ஒரு நொடி? திரைவிமர்சனம் https://touringtalkies.co/%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4/ Mon, 29 Apr 2024 09:35:29 +0000 https://touringtalkies.co/?p=41616 மதுரையைச் சேர்ந்த சேகரன் திடீரென காணாமல் போவதையடுத்து, அவரது மனைவி சகுந்தலா இன்ஸ்பெக்டர் பரிதியிடம் புகார் அளிக்கிறார். இந்த வழக்கில் சேகரனுக்கு கந்து வட்டிக்குக் கடன் வழங்கிய கரிமேடு தியாகு மற்றும் ஊழல் அரசியல்வாதி திருஞானமூர்த்தி ஆகியோரின் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இந்த நிலையில், பார்வதி என்ற இளம்பெண்ணின் மரணம் விசாரணைக்கு மேலும் சிக்கல்களைக் கொடுக்கிறது. இரண்டு தனித்து விளங்கும் வழக்குகளின் பின்னணியில் இணைப்புகள் இருக்கலாம் என்று ஐயப்பாடு ஏற்படுகிறது. இந்த இரு வழக்குகளிலும் மர்மங்களை […]

The post எப்படி இருக்கு ஒரு நொடி? திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
மதுரையைச் சேர்ந்த சேகரன் திடீரென காணாமல் போவதையடுத்து, அவரது மனைவி சகுந்தலா இன்ஸ்பெக்டர் பரிதியிடம் புகார் அளிக்கிறார். இந்த வழக்கில் சேகரனுக்கு கந்து வட்டிக்குக் கடன் வழங்கிய கரிமேடு தியாகு மற்றும் ஊழல் அரசியல்வாதி திருஞானமூர்த்தி ஆகியோரின் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், பார்வதி என்ற இளம்பெண்ணின் மரணம் விசாரணைக்கு மேலும் சிக்கல்களைக் கொடுக்கிறது. இரண்டு தனித்து விளங்கும் வழக்குகளின் பின்னணியில் இணைப்புகள் இருக்கலாம் என்று ஐயப்பாடு ஏற்படுகிறது. இந்த இரு வழக்குகளிலும் மர்மங்களை கண்டறிந்து குற்றவாளிகளைக் கண்டறிவதே படத்தின் கதையாகும்.

இது போன்ற சந்தேகங்களையும் திருப்பங்களையும் கொண்ட த்ரில்லர் திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகப்படியான திருப்பங்கள் கதையின் இயல்பான ஓட்டத்தைப் பாதிக்கிறது. எந்த அளவுக்கு திருப்பங்கள் தேவை என்பதை நன்கு கவனித்து, இயல்பான ஓட்டத்துடன் செல்லும் கதையாக உருவாக்கியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

அரசியல் விசாரணையின் சூழலில், பார்வதி (நிக்கிதா) என்ற இளம்பெண்ணின் மரணம் இந்தப் புலனாய்வை மேலும் சிக்கலாக்குகிறது. இரு வெவ்வேறு அடுக்குகளைக் கொண்ட இந்த வழக்குகளின் மர்மங்களை பரிதி கலைக்க முடியுமா, குற்றவாளிகள் யார் என்பதே இந்த ‘ஒரு நொடி’ படத்தின் கதையாகும்.

தமன்குமார் கம்பீரமான தோற்றம், அதிகாரிக்கு ஏற்ற உடலமைப்பு போன்ற தன்மைகளைக் கொண்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருந்தாலும், நடிப்பிலும் அவரது குரல் இயற்கையாக இருந்தாலும், டப்பிங்கிலும் மேலும் கவனம் தேவைப்படுகிறது.

வேல ராமமூர்த்தி, இரக்கமற்ற வில்லனாக நடித்துள்ளார். மதுரை என்றவுடனே வருகை பதிவில் கையைத் தூக்கி உள்ளேன் ஐயா என்று என்ட்ரி கொடுக்கும் அவரின் வழக்கமான ரியாக்ஷன்கள் பார்க்க ரசிகர்கள் பழகிவிட்டனர். எம்.எஸ்.பாஸ்கரின் இசை சில காட்சிகளுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

சீட்டின் முனையில் அமர்ந்து பார்க்கக்கூடிய த்ரில்லிங் அனுபவத்தைத் தருவதே திரைக்கதையின் நோக்கம். ஆனால், அடுத்தடுத்த திருப்பங்கள் மற்றும் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வுகள் சில இடங்களில் ஏற்படுத்துகின்றன. இருப்பினும், இறுதி வரை சஸ்பென்ஸை சரியாக கொடுத்த இயக்குநர் மணிவர்மனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கத்தக்கது.

The post எப்படி இருக்கு ஒரு நொடி? திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ரத்னம் படம் ரத்னம் மாதிரி இருக்கா? ஹரியின் ஆக்ஷனால் அதிர்ச்சியான ரசிகர்கள்… https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/ Sat, 27 Apr 2024 11:05:53 +0000 https://touringtalkies.co/?p=41549 எதிலும் ஆக்ஷன் எங்கும் ஆக்‌ஷன் இப்படி ஆக்ஷன் சேஸிங் படங்களுக்கான அடையாளம் என்றாலே ஹரி என்று சொல்லலாம்‌.விஷாலை வைத்து தாமிரபரணி, பூஜை படங்களை எடுத்த ஹரி அவரை வைத்து ரத்னம் என்ற படத்தை எடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார்.ஆனால் இந்த ஹாட்ரிக் எந்தளவுக்கு சிறந்தது என்பதே ரசிகர்களின் விமர்சனங்களை பொறுத்துதான். ரத்னம் படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், முரளி ஷர்மா, சமுத்திரகனி, கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் விஷால் எப்போதும் போல […]

The post ரத்னம் படம் ரத்னம் மாதிரி இருக்கா? ஹரியின் ஆக்ஷனால் அதிர்ச்சியான ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
எதிலும் ஆக்ஷன் எங்கும் ஆக்‌ஷன் இப்படி ஆக்ஷன் சேஸிங் படங்களுக்கான அடையாளம் என்றாலே ஹரி என்று சொல்லலாம்‌.விஷாலை வைத்து தாமிரபரணி, பூஜை படங்களை எடுத்த ஹரி அவரை வைத்து ரத்னம் என்ற படத்தை எடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார்.ஆனால் இந்த ஹாட்ரிக் எந்தளவுக்கு சிறந்தது என்பதே ரசிகர்களின் விமர்சனங்களை பொறுத்துதான். ரத்னம் படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், முரளி ஷர்மா, சமுத்திரகனி, கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் விஷால் எப்போதும் போல இது நம்ப ஏரியா என்றவாறு சண்டக்கோழி, தாமிரபரணி படங்களில் எந்த மாதிரி ஆக்‌ஷனில் தெறிக்கவிட்டிருந்தாரோ அதேபோல் இந்த படத்திலும் பறக்கவிட்டு இருக்கிறார். பிரியா பவானி சங்கருக்கு இந்த படத்தில் டபுள் ஆக்‌ஷன். தனக்கு கொடுத்த ரோல்-ஐ சற்றும் குறைவின்றி நிறைவாக முடித்திருக்கிறார். சமுத்திரகனி மற்றும் கெளதம் மேனன் தங்களுக்கு கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்ய மெயின் வில்லனாக மாஸ் காட்டியுள்ளார் தெலுங்கு நடிகர் முரளி ஷர்மா.

படத்தின் நிறை என்னவென்று பார்த்தோம் என்றால், ஹரி இயக்கம் என்றாலே ஆக்ஷன் தான் அப்படி இருக்க ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டும் அளவுக்கு தாமிரபரணி படத்தை போல எமோஷனல் காட்சிகளில் க்ளாஸ் காட்டியுள்ளார்.பிரியா பவானி சங்கருக்கும் விஷாலுக்கும் இடையேயான உறவு என்ன என்பதில் வைத்திருக்கிறார் ஹரி ட்விஸ்ட்.பீட்டர் ஹெய்ன், கனல் கண்ணன் என பல சண்டை இயக்குநர்கள் சேஸிங் சீன்களை அல்டிமேட்டாக கொடுத்துள்ளனர்.

படத்தின் குறை என்னவென்று பார்த்தோம் என்றால், ஹீரோயினை காப்பாற்ற எத்தனை பேர் வந்தாலும் விடாமல் பறக்கவிடும் ஹீரோவாக தோற்றமளிக்க இது கொஞ்சம் என்னடா இது என்றவாறு கேட்க்க தோன்றுகிறது.படத்தின் முதல் பகுதியில் தப்பை தட்டிக் கேட்கும் நாயகனாக காட்டி கதையை கடைசியில் நாயகியின் பக்கம் மொத்த படத்தையும் திருப்பி விட்டது படம் வலுவிலக்க காரணமாகிவிட்டது.

அதேபோல் யோகி பாபு காமெடி என்ற பெயரில் இந்த படத்தில மொக்கைப் போட ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பின்னணி எல்லாம் ஒருவிதத்தில் ஓகேவாக அமைந்துள்ளது. பாடல்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. ஹரி மற்றும் விஷாலின் கமர்ஷியல் படங்களை ரசிக்க கூடியவராக இருந்தால் இது ஒரு முறை பார்க்கும் படம்.

The post ரத்னம் படம் ரத்னம் மாதிரி இருக்கா? ஹரியின் ஆக்ஷனால் அதிர்ச்சியான ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
நேற்று இந்த நேரம் – திரைவிமர்சனம் https://touringtalkies.co/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf/ Tue, 02 Apr 2024 13:30:32 +0000 https://touringtalkies.co/?p=40655 நண்பர்களுடன் ஊட்டிக்கு சுற்றுல்லா செல்லும் நாயகன் சாரிக் ஹாசனும் அவரது காதலி ஹரிதாவும் ஒரு கட்டத்தில் நண்பர்களுக்கு இடையே மோதிக் கொள்கின்றனர். நாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று மாயமாகி விடுகிறார். இது பற்றி போலீஸ் நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்கிறது. இந்த நிலையில் புகார் கொடுத்த நண்பரும் திடீரென்று மாயமாகி விடுகிறார். மாயமான இரண்டு பேர் பற்றியும் போலீஸ் விசாரிக்கும் போது நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். இறுதியில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா? அவர்கள் மாயமானதற்கு பின்னணியில் […]

The post நேற்று இந்த நேரம் – திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
நண்பர்களுடன் ஊட்டிக்கு சுற்றுல்லா செல்லும் நாயகன் சாரிக் ஹாசனும் அவரது காதலி ஹரிதாவும் ஒரு கட்டத்தில் நண்பர்களுக்கு இடையே மோதிக் கொள்கின்றனர். நாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று மாயமாகி விடுகிறார்.

இது பற்றி போலீஸ் நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்கிறது. இந்த நிலையில் புகார் கொடுத்த நண்பரும் திடீரென்று மாயமாகி விடுகிறார். மாயமான இரண்டு பேர் பற்றியும் போலீஸ் விசாரிக்கும் போது நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள்.

இறுதியில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா? அவர்கள் மாயமானதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்களை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது என்பது மீதி படம்

படத்தின் தொடக்கமே விசாரணையில் ஆரம்பிக்கிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் அந்த நண்பர்கள் ஏழு பேரின் வாழ்க்கை பக்கங்களை சிறிது சிறிதாக விவரிக்கிறது. அதில் சுவாரஸ்யம் இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் திடுக்கிடும் சம்பவங்களும், திருப்பங்களும் எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சியும் சூப்பர் என்று சொல்ல வைக்கிறது.

குற்றம் செய்தோர் தரப்பின் நியாயத்தையும், குற்றம் செய்ய தூண்டியவரின் குணநலன்களை தர்க்க ரீதியாக அமைத்த விதம் அருமை. அதே நேரம் காணாமல் போன நண்பனை தேட எடுத்த முயற்சி , நண்பர்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்ளாமல் தங்கிய இடத்திலேயே வைத்தது ஆகியவற்றுக்கு தர்க்கங்களை உருவாக்காமல் போனது பெரும் குறையே.

வில்லத்தனம் கலந்த பாத்திரத்தில் நாயகன் ஷாரிக் ஹாசன். முரண்களை அழகாக தனது நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஹரிதா சிறப்பாக நடித்து அந்தப் பாத்திரத்துக்கு பெருமை சேர்க்கிறார்.

நண்பர்களாக நடித்திருக்கும் மோனிகா, ரமேஷ் காவியா, திவாகர், குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த் எல்லோருமே புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு இயல்பாக நடித்து அந்த பாத்திரமாகவே தெரிகிறார்கள். புலனாய்வு அதிகாரி வேல்ராஜாக வரும் ஆனந்த் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஒரே சம்பவத்தை பல கோணங்களில் விவரித்து திரைக்கதையை வித்தியாசமாக கையாண்ட இயக்குனர் சாய் ரோஷன் கே ஆரின் எண்ணத்தை மனதில் அழுத்தமாக பதிய வைக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷால். எடிட்டர் கோவிந்துக்கு இந்தப் படம் சவாலான படம்தான். இசையமைப்பாளர் கெவின்.எம். பாடல்களில் தந்த ஈர்ப்பைப் பின்னணி இசையிலும் நன்றாக கொடுத்திருக்கலாம்.

வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு இந்தப் படத்தை கொடுக்க வேண்டும் என்று நல்ல கதையை அதற்கு தகுந்த பாத்திரங்களை உருவாக்கி அதற்கான நடிகர்களை தேர்வு செய்து வேலை வாங்கி படமாக்கிய இயக்குனர் சாய் ரோஷன் கே.ஆர். அதை கொண்டு சென்ற விதம் மூலம் கவனம் பெறுகிறார்.

நேற்று இந்த நேரம் – வித்தியாசமான நல்ல முயற்சி

The post நேற்று இந்த நேரம் – திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இடி மின்னல் காதல் – திரைவிமர்சனம் https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf/ Sat, 30 Mar 2024 10:25:40 +0000 https://touringtalkies.co/?p=40517 நாயகன் சிபியும், நாயகி பவ்யாவும் காதலிக்கிறார்கள். நாயகன் சிபி வேலை விஷயமாக அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதால் திரும்பி வர மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால் இருவருக்கும் இடையே ஒருவித தவிப்பு இருக்கிறது. அதை போக்கி கொள்ள வெளியில் சென்று பேசி மகிழ்ந்து வீடு திரும்புவார்கள். காரில் வரும் போது அன்பு மிகுதியால் முத்தம் கொடுத்து கொள்ள முயலும் போது ஒருவர் காரில் அடிபட்டு உயிரிழக்கிறார். இந்த விபத்து காரணமாக காதலன் வெளிநாடு செல்ல தடையாகிவிடும் என்று கருதிய […]

The post இடி மின்னல் காதல் – திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
நாயகன் சிபியும், நாயகி பவ்யாவும் காதலிக்கிறார்கள். நாயகன் சிபி வேலை விஷயமாக அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதால் திரும்பி வர மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால் இருவருக்கும் இடையே ஒருவித தவிப்பு இருக்கிறது. அதை போக்கி கொள்ள வெளியில் சென்று பேசி மகிழ்ந்து வீடு திரும்புவார்கள்.

காரில் வரும் போது அன்பு மிகுதியால் முத்தம் கொடுத்து கொள்ள முயலும் போது ஒருவர் காரில் அடிபட்டு உயிரிழக்கிறார். இந்த விபத்து காரணமாக காதலன் வெளிநாடு செல்ல தடையாகிவிடும் என்று கருதிய நாயகி பவ்யா, நாயகனை காரை எடுத்துக் கொண்டு போக சொல்கிறார்.

சாலையில் வரும் போது விபத்தை பார்த்தேன். கார் வேகமாக போய்விட்டது என்று போலீசுக்கு தகவல் கொடுத்து காதலனை காப்பாற்ற பவ்யா முயற்சிக்கிறார். ஆனால், காதலன் சிபி தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து வருத்தப்படுகிறார். உண்மையை சொல்லி நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்கு பவ்யாவும், சிபியின் நண்பர் ஜெகனும் தடையாக இருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் வெளியே போன தந்தை வீட்டுக்கு வரவில்லை என்று உயிரிழந்தவரின் மகன் ஆதித்யா தேடுகிறார். தாய் இறந்தது முதல் தந்தை தனக்காக வேறு திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்கிறார் என்பதால் அவருக்கு அவரது தந்தையை அதிகம் பிடிக்கும். மேலும் ஆதித்யாவுக்கு மனஅழுத்த வியாதி இருக்கும். இதனால் மயக்கமடையும் வரை கத்தி களேபரம் செய்வார். அவருக்கு அவ்வப்போது யாஷ்மின் என்கிற பெண்மணி உதவியாக இருப்பார்.

இந்த நிலையில் ஆதித்யாவின் தந்தைக்கு கடன் கொடுத்த தாதா வின்செண்ட் நகுல் அடியாட்களுடன் வீடு தேடி வருகிறார். கடனுக்கு பயந்து மகனை தனியாகவிட்டு தலைமறைவானதாக கருதி மகனை தங்கள் இடத்துக்கு கொண்டு சென்றால் தந்தை தேடி வருவான் என்று கணக்கு போடும் தாதா வின்செண்ட் நகுல் காரில் ஆதித்யாவை தூக்கிப் போட முயற்சிக்கிறார்.

அப்போது அங்கு வரும் நாயகன் சிபி, தன்னால் உயிரிழந்தவரின் மகன்தான் ஆதித்யா என்பது தெரியாமல் தாதாவின் அடியாக்களிடமிருந்து ஆதித்யாவை காப்பாற்றி நண்பன் ஜெகனின் இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கிறார்.

பிறகு ஆதித்யாவின் மனஅழுத்தம் பற்றி தெரிந்து கொண்டு அவனுக்கு சிகிச்சை அளித்து அனாதையாக இருக்கும் ஆதித்யாவுக்கு ராதாரவியின் கீழே உள்ள ஹோமில் சேர்த்துவிட முடிவு செய்கிறார். ஆனால், தனது தந்தை இறந்ததற்கு காரணம் சிபி தான் என்று ஆதித்யாவுக்கு தெரிய வருகிறது. இதனால், தாதா ஆட்களுடன் மோதவிட்டு பழி தீர்க்க வேண்டும். சிபியை கொலை செய்ய வேண்டும் என்று ஆதித்யா திட்டம் போடுகிறார்.

அவரது அந்த திட்டம் நிறைவேறியதா? தாதா ஆட்கள் சிபியை என்ன செய்தார்கள்?. பிரச்சினையில் சிக்கிய சிபி வெளிநாடு செல்ல முடிந்ததா? என்பதை மீதி படம் சொல்கிறது.

ஒரு விபத்து மூன்று கதைகளை இணைத்து ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல திரைக்கதை அமைத்து படமாக்கி உள்ளனர்.

நாயகனாக நடித்திருக்கும் சிபி காதல் காட்சியிலும், ஆக்சன் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து வேதனைப்படும் காட்சியிலும், ஆதித்யாவின் சூழ்நிலையை அறிந்து கவலைப்படும் காட்சியிலும் நேர்த்தியான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார்.

கதாநாயகி பவ்யா ட்ரிகா காதல் காட்சிகளில் மட்டுமல்ல மனஅழுத்தம் உள்ள ஆதித்யாவை அதிலிருந்து வெளியே கொண்டுவர போராடுகிற காட்சில் அக்கறையுள்ள அன்புகாட்டும் பாத்திரத்தில் நடித்து மனதில் நிற்கிறார்.

கடனுக்கு சிறுவனை தூக்கும் பாத்திரத்தில் வின்செண்ட் நகுல். அவரது பாத்திரத்தை தாதாவா ஹோமோ செக்ஸ் பிரியரா என்று விளங்கி கொள்ள முடியவில்லை. இருப்பினும் ரொம்ப பில்டப்புடன் வருகிறார். அடிக்கிறார். அடிவாங்குகிறார்.

சிறுவனாக நடித்திருக்கும் ஆதித்யா அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற இடங்களில் கோபத்தையும், மனஅழுத்தம் கொண்டு கத்துகிற காட்சில் பரிதாபத்தையும், கொலைவெறி கொள்ளும் போது வழக்கமான வில்லன் நடிப்பையும் வழங்கி அந்த பாத்திரமாகவே தெரிகிறார்.

படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஷ்மின், இயல்பாக நடித்து கதைக்கும் படத்திற்கும் ஒரு பெரிய காரணமாக இருந்திருக்கிறார். காதலால் பெற்றோரை, குடியால் மனைவியை, விபத்தால் மகனை இழக்கும் தந்தையாக மனோஜ். தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கருணை உள்ளம் கொண்ட பாதிரியாராக ராதாரவி, மற்றவர்களுக்கு உதவும் மனமுள்ள போலீஸாக பாலாஜி சக்திவேல், நண்பனுக்கு உதவும் ஜெகன் என படத்தில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். எல்லோரும் அவர்களின் பாத்திரங்களுக்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள்

திரைக்கதையோடு பயணிக்கும் ஜெயசந்தர் பின்னேனியின் ஒளிப்பதிவு, சஸ்பென்ஸ் குறையாமல் காட்சிகளை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவிய சாம் சி எஸ். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.

ஆசைகள் வாழ்க்கை பயணத்தை முடிக்க காரணமாக இருக்க கூடாது. அது காதலாக இருந்தாலும், காமமாக இருந்தாலும். காதல், காமம் இரு வெவ்வேறு கதைகளை ஒன்றாக இணைத்து அதில் பாதிக்கப்படும் சிறுவனையும் அவன் பிரச்சினையையும் சொல்லும் இயக்குநர் பாலாஜி மாதவன், திரைக்கதை அமைத்தத்தில் வல்லவராக இருக்கிறார். படமாக்கிய விதத்திலும் பாராட்டுக்குரியவராக இருக்கிறார். வில்லன் பாத்திரத்திற்கு பெரிய வேலை கொடுத்து காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் இடி மின்னல் காதலை இன்னும் ரசித்திருக்கலாம்.

The post இடி மின்னல் காதல் – திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம் https://touringtalkies.co/%e0%ae%86%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9/ Fri, 29 Mar 2024 04:53:37 +0000 https://touringtalkies.co/?p=40422 ‘தி கோட் லைஃப்’ என்கிற பெயரில் மலையாளத்தில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழில் ‘ஆடுஜீவிதம்’ என பெயர் வைத்துள்ளனர். கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பிரிதிவிராஜ், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக வீட்டை அடகு வைத்து தனது தாயார், கர்ப்பிணி மனைவி இருவரையும் தனியே விட்டு சவூதி அரேபியாவில் கட்டிட வேலை செய்ய செல்கிறார். அவருடன் ஹக்கீம் என்கிற நண்பரும் செல்கிறார். பாஸ்போட் மற்றும் விசாவுடன் சவுதியில் […]

The post ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘தி கோட் லைஃப்’ என்கிற பெயரில் மலையாளத்தில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழில் ‘ஆடுஜீவிதம்’ என பெயர் வைத்துள்ளனர்.

கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பிரிதிவிராஜ், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக வீட்டை அடகு வைத்து தனது தாயார், கர்ப்பிணி மனைவி இருவரையும் தனியே விட்டு சவூதி அரேபியாவில் கட்டிட வேலை செய்ய செல்கிறார். அவருடன் ஹக்கீம் என்கிற நண்பரும் செல்கிறார்.

பாஸ்போட் மற்றும் விசாவுடன் சவுதியில் இறங்கி தங்களை அழைத்து செல்ல ஏஜென்ட் வருவார் என்று காத்திருக்கின்றனர். இவர்களுக்கு தாய் மொழியை தவிர வேறு மொழி தெரியாது.

ஏமாந்தவர்கள் அடிமையாக வேலை செய்ய கிடைப்பார்களா என்று அங்கு அலைந்து கொண்டிருக்கும் கஃபீல் என்பவனிடம் அவர்கள் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள். தங்களை அழைக்க வந்த ஏஜென்ட் என்று நம்பி அவரிடம் பாஸ்போட் மற்றும் விசாவை கொடுத்து… அவருடன் சேர்ந்தே பயணிக்கும் பிரிதிவிராஜும், அவரது நண்பர் ஹக்கீமும் சவூதி வந்து சேர்ந்த செய்தியை ஊருக்கு தெரிவிக்க கஃபீலிடம் போன் கேட்கின்றனர்.

ஆனால், இவர்கள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் நகரத்திலிருந்து தொலைதூரம் உள்ள பெரிய பாலைவனத்துக்கு அழைத்து செல்லும் கஃபீல், வெவ்வேறு இடங்களில் அவர்களை இறக்கிவிட்டு அங்கு ஆடுகள், ஒட்டகங்கள் பார்த்துக் கொள்ளும் வேலையை கொடுக்கிறார்.

ஆரம்பத்தில் அவரிடம் பேசி அழுது காலில் விழுந்து தப்பிக்கலாம் என்று நினைத்த பிரிதிவிராஜுக்கு போக போக அங்கு ஏற்கனவே இருக்கும் அடிமையை பார்த்து அதிர்ந்து போகிறார். தப்பிக்க நினைத்தால் துப்பாக்கியால் சுட்டு சாகடிப்பான் கஃபீல் என்பதை அனுபவ ரீதியாக தெரிந்து கொள்கிறார்.

வேறு வழி இல்லாமல் மூன்றாண்டுகள் அடிமையாக ஆடுகள் ஒட்டகங்களுடன் வாழும் பிரிதிவிராஜ், ஒரு நாள் அங்கிருந்து தப்பித்து திசை தெரியாத வழியில் செல்கிறார். அதன் பிறகு எப்படி அவர் ஊர் வந்து சேர்கிறார் என்பது மீதி படம்.

இந்தப் படத்தின் கதை உண்மை கதை. ஒருவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை அனுபவித்த கொடுமைகளை பென்யமின் நாவலாக எழுதி இருந்தார். அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது பிளஸ்ஸி இயக்கத்தில் திரைப்படமாகியுள்ளது.

சவூதி அரேபியாவில் வேலைக்குச் சேர்ந்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தனது சிறிய கிராம வாழ்க்கையை விட்டு வெளியேறுவதில் இருந்து படம் தொடங்குகிறது. இடையிடேயே பிளாஷ் பேக் காட்சிகளில் பிரிதிவிராஜின் கர்ப்பிணி மனைவி சைனு, அதாவது அமலாபாலுடன் திருமணம்… மகிழ்ச்சியான வாழ்க்கை… எதிர்காலத்திற்கான திட்டம்… சவுதி அரேபியாவுக்கு செல்லவது போன்ற காட்சிகள் வந்து போகும். அந்த காட்சிகள் இயல்பானதாக உண்மைக்கு நெருக்கமாக சமரசமின்றி விரிவடைகிறது. நாமும் சவூதி அரேபியாவுக்கு சென்று அந்த சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை உள்ளத்தில் கடத்துகிறார், இயக்குநர் பிளஸ்ஸி.

எப்போதும் வித்தியாசமான திரைக்கதைகளை முயற்சிக்கும் பிருத்விராஜ், இந்த படத்திலும் மரணத்திற்கு அருகில் உள்ள வாழ்க்கை வாழ்ந்து காட்டி இருக்கிறார். நஜீப் முகமது என்கிற அந்த பாத்திரத்தின் அறியாமையை, ஏமாற்றத்தை, கஷ்டத்தை, வியர்வையை, கண்ணீரை, வலியை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். அநாதை ஆக்கப்பட்ட ஒரு அடிமையை அவரின் உணர்வை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் போது அவருடைய அபாரமான நடிப்பு ஆற்றலால் அசந்து போகிறோம்.

தப்பித்து செல்லும் காட்சிகளில் பாலைவன சுடு மணலில் காலில் கொப்பளம், குடிக்க தண்ணீர் கிடைக்காமல், வழி தெரியாமல் மயங்கி விழுகிற காட்சிகளில் கண்ணீரை வரவழைக்கும் நடிப்பை வழங்கி இருக்கிறார். உடல் மாற்றத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்திருப்பதை காணும் போது அவரது நடிப்பு ஆர்வம் பிரமிக்க வைக்கிறது.

பிரித்விராஜின் நண்பர் ஹக்கீம் பாத்திரத்தில் நடித்திருக்கும் கே.ஆர். கோகுலின் நடிப்பும் அவ்வளவு இயல்பு. இவர்கள் இருவரையும் தப்பிக்க வைக்க உதவும் ஆப்பிரிக்க அடிமையான இப்ராஹிம் கான் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜிம்மி ஜீன்-லூயிஸ் நடிப்பும் மனதில் நிற்கிறது. இவர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் கஃபீல் பாத்திரத்தில் நடித்திருக்கும் தாலிப் அல் பலுஷியின் நடிப்பு செம மிரட்டல். பிரிதிவிராஜ் மனைவியாக வரும் அமலாபால் அந்தப் பாத்திரமாக மாறி மனதில் நிற்கிறார்.

முழு படமும் பாலைவனப் பகுதியில் நடக்கிறது. ஒரு முக்கியமான தருணத்தில் வரும் மணல் புயல் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாலைவன காட்சிகளிலும், பிருத்விராஜின் துன்பத்தையும் வலியையும் திறம்பட படம்பிடித்து காட்டி இருக்கிறார், ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ்.

ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்பதையே மறக்க வைத்திருக்கிறார், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மிகவும் நன்றாக உள்ளது. பல காட்சிகளின் தாக்கத்தை அவரது இசை உயர்த்துகிறது. திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் ரகுமானே பாடல் நம் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் பிளெஸ்ஸி, கதையை ஆழமாக விவரித்திருக்கிறார். சினிமா தனமே தெரியாத அளவுக்கு படத்தில் கமர்சியல் காட்சிகள் இல்லமால் உண்மைக்கு நெருக்கமாக நிஜ வாழ்க்கையை படைத்து உயர்ந்து நிற்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் ஆழம்… அதற்கான மெனக்கடல் உழைப்பு தெரிகிறது. இருப்பினும் பாலைவனத்தில் எதற்காக ஆடு மேய்க்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கலாம். முதல் பாதியை விட இரண்டாம் பாதி சிறப்பாக உள்ளது.

ஆடு ஜீவிதம் – கஷ்ட ஜீவிகளின் வாழ்க்கை

The post ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
படத்துல கதையே ஒரு காரும் ஆறு பேரும்… இடி மின்னல் காதல் https://touringtalkies.co/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Mon, 25 Mar 2024 09:46:19 +0000 https://touringtalkies.co/?p=40153 அட சில படத்தோட தலைப்பு ஈர்க்குற விதமா இருக்கும்.அதே மாதிரியான தலைப்போட சீக்கிரம் வெளிவர இருக்குற படம் தான் இடி மின்னல் காதல். ஈர்க்குற விதமா இருக்குற இந்த படத்த பத்தி இந்த படத்தை இயக்குன அறிமுக இத இயக்குனரா இருக்குற பாலாஜி மாதவன் பல தகவல்களை பகிர்ந்துகிட்டாரு. வாங்க அத பத்தி பாப்போம். ஒரு இடத்துல ஒரு கார் விபத்து நடக்குது அதை சுத்தி நடக்குற சம்பவம் எல்லாமும் தான் படத்தோட கதையா இருக்கு.இந்த கதையோட […]

The post படத்துல கதையே ஒரு காரும் ஆறு பேரும்… இடி மின்னல் காதல் appeared first on Touring Talkies.

]]>
அட சில படத்தோட தலைப்பு ஈர்க்குற விதமா இருக்கும்.அதே மாதிரியான தலைப்போட சீக்கிரம் வெளிவர இருக்குற படம் தான் இடி மின்னல் காதல். ஈர்க்குற விதமா இருக்குற இந்த படத்த பத்தி இந்த படத்தை இயக்குன அறிமுக இத இயக்குனரா இருக்குற பாலாஜி மாதவன் பல தகவல்களை பகிர்ந்துகிட்டாரு. வாங்க அத பத்தி பாப்போம்.

ஒரு இடத்துல ஒரு கார் விபத்து நடக்குது அதை சுத்தி நடக்குற சம்பவம் எல்லாமும் தான் படத்தோட கதையா இருக்கு.இந்த கதையோட மையமா ஆறு கேரக்டர் இருக்கும். அந்த ஆறு பேருமே இந்த விபத்துனால பாதிக்கப்பட்டவங்களா இருப்பாங்க ஏதோ ஒரு விதத்துல. இந்த ஆறு பேர சுத்தி தான் கதை ஓடும். ஒரு வாரத்துல நடக்குற கதைதான் இந்த இடி மின்னல் காதல் படம். நவம்பர் 7ஆம் தேதி ஆரம்பிக்கிற கதை 14ஆம் தேதி முடியுது ஆனால் அப்படி தேதி படியே கத போகாது என்றார்.

எல்லாருக்கும் நல்லாவே தெரிஞ்சா பிக் பாஸ் சிபி, அப்புறம் ஜோ படத்துல நடிச்சிருந்த பவ்யா த்ரிகா, ஆரண்ய காண்டம் யாஸ்மின், பாலாஜி சக்திவேல், ராதா ரவி, ஜெகன் இந்த ஆறு பேரும் தான் அந்த ஆறு விதமான கேரக்டர். சிபி இந்த படத்துல ஹீரோவா நடிச்சிருக்காரு ஆனா அவர் என்னவா நடிச்சிருக்காரு அப்டின்றது தான் இந்த படத்துல இருக்குற சஸ்பென்ஸ்.

இவருக்கு அப்புறம் பவ்யா ஆர்கிடெக் அப்படி என்ற கேரக்டர்லயும், பல வருடங்களுக்கு அப்புறம் ஆரண்ய காண்டம்ல நடிச்சிருந்த யாஸ்மின் நடிச்சு இருக்காங்க, அவங்களுக்கு இது இரண்டாவது படம். இவங்க ஹீரோவோட பக்கத்து வீட்டுக்காரராவும், ஹெட் கான்ஸ்டபிளா பாலாஜி சக்திவேல், சர்ச் பாதராக ராதாரவி, ஜெகன் வந்து மெக்கானிக்காகவும், கயல் படத்தில நடிச்ச வின்சென்ட் தான் இந்த படத்தோட வில்லன் ரோல். இவங்க கூட ஒரு குட்டி பையனும் நடிச்சிருக்கான் அவன் பெயர் தான் ஆதித்யா.

இந்த கதையில பார்த்தீங்க அப்படின்னா சென்னையில் தான் முழுசா இந்த கதை நடக்குது. வல்லநாடு மலையிலிருந்து வில்லன் குரூப் ஒன்னு சென்னைக்கு வராங்க.சென்னையில போர் நினைவுச்சின்னம் இருக்கிற இடம் தான் முக்கியமான ஸ்பாட்டா இந்த கதையில இருக்கும்‌. அந்த ரவுண்டானால தான் கார் விபத்து நடக்குது இதுவரைக்கும் எந்த படத்தோட ஷூட்டிங்ம் இந்த இடத்துல நடந்தது இல்ல‌ ஆனா நாங்க இராணுவத்துகிட்ட எந்த அளவுக்கு விதத்தில இந்த கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் விளக்குனதுக்கு அப்புறம் தான் ராணுவம் அனுமதி கொடுத்தாங்க….

சுவாரசியமா இருக்கிற விஷயம் இந்த படத்துல என்னன்னா, ஆறு கேரக்டருமே ஆடியன்சை ஈசியா எமோஷன்ஸ கனெக்ட் பண்ணிடுவாங்க. எல்லாமே ஒன்னோடு ஒன்னு சேருரப்ப இது ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் மாதிரி இருக்கும் அதனால தான் இந்த படத்துக்கு இடி மின்னல் காதல் டைட்டில். ஆண் பெண் காதல் அப்படினு மட்டும் இல்லாம ஒட்டுமொத்தமா மனுஷங்க மேல இருக்கிற காதலை சொல்லி இருப்போம் மனிதநேயத்தை பத்தி கண்டிப்பா இந்த படம் பேசும் உணர்த்துர விதமாக இருக்கும் என தெரிவித்தார் .

அவரின் திரைப்பயணத்தை பற்றி கேட்டபோது, நான் இயக்குனர் மிஷ்கின் கிட்ட தான் முதன் முதலில் சேர்ந்து அவரோட 4 வருஷம் வர்க் பண்ணேன். அப்புறம் கோ டைரக்டரா ‘ரிச்சி’ அப்டின்ற படத்துல வொர்க் பண்ண அதுக்கப்புறம் சாய்பல்லவி நடிச்ச ‘கார்கி’ படத்துல ஸ்கிரிப்ட் ரைட்டிங் டீம் ஓட வேல செஞ்சேன் .அது மட்டும் இல்லாம மாதவன் சார் ஓட ராக்கெட் படத்துல அசோசியேட் டைரக்டர் வொர்க் பண்ணி தமிழ் இங்கிலீஷ் வெர்சனுக்கு இன்சார்ஜ் நான் இருந்தேன். இப்போ இயக்குனரா ஆக கரெக்ட்டான சந்தர்ப்பம் கிடச்சது நானும் கேமரா மேன் ஜெயச்சந்திரன் சேர்ந்து தான் இந்த இடி மின்னல் காதல் படத்தை தயாரிச்சிருக்கோம் என்று பகிர்ந்து கொண்டார் இயக்குனர் பாலாஜி மாதவன்.

The post படத்துல கதையே ஒரு காரும் ஆறு பேரும்… இடி மின்னல் காதல் appeared first on Touring Talkies.

]]>
லோக்கல் சரக்கு விமர்சனம் https://touringtalkies.co/local-sarakku-review/ Sun, 28 Jan 2024 00:25:03 +0000 https://touringtalkies.co/?p=39499 குடும்பத்தலைவர் பொறுப்பில்லாமல் குடிகாரராக இருந்தால், அந்த குடும்பம் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் கூறி உள்ளனர். சென்னையில் தனது தங்கையுடன் வசித்து வருகிறார் கதாநாயகன் தினேஷ். எந்தவித வேலைக்கும் போகாமல் தனது தங்கை சம்பாதிக்கும் பணத்தில் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்.மேலும் அவருக்கு தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சினிமா துணை நடிகையாக இருக்கும் கதாநாயகி உபாசனா தினேஷின் எதிர் வீட்டில் குடி வருகிறார். அவரிடமும் அவ்வப்போது 200 […]

The post லோக்கல் சரக்கு விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
குடும்பத்தலைவர் பொறுப்பில்லாமல் குடிகாரராக இருந்தால், அந்த குடும்பம் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் கூறி உள்ளனர்.

சென்னையில் தனது தங்கையுடன் வசித்து வருகிறார் கதாநாயகன் தினேஷ். எந்தவித வேலைக்கும் போகாமல் தனது தங்கை சம்பாதிக்கும் பணத்தில் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்.மேலும் அவருக்கு தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சினிமா துணை நடிகையாக இருக்கும் கதாநாயகி உபாசனா தினேஷின் எதிர் வீட்டில் குடி வருகிறார். அவரிடமும் அவ்வப்போது 200 ரூபாய் வாங்கி குடிக்கிறார். இவை அனைத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத அவரது தங்கை வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார். இதன் பிறகு என்ன ஆனது என்பதே லோக்கல் சரக்கு படத்தின் கதை.

நடன கலைஞர் தினேஷ் ஒரு குடிகாரராக  வருகிறார். இமேஜ் குறித்து கவலைப்படாமல் நடித்ததற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.  தவிர நிஜ குடிகாரரை கண் முன் நிறுத்துகிறார்.

தினசரி ஒவ்வொருவரிடம் வித்தியாச வித்தியாசமாக காரணங்களைக் கூறி, கடன் வாங்கி அவரது நண்பர் யோகி பாபு உடன் குடிக்கும் காட்சிகள் ரசிக்கவைக்கின்றன.

அவரது நண்பராக  யோகி பாபு வருகிறார். இருவரது காமெடி  காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகி உள்ளன.

கதாநாயகி உபாசனா.  நடிப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்துகிறார். இவர்களை தவிர வினோதினி, இமான் அண்ணாச்சி, சாம்ஸ் ஆகியோர்  படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

இடைவேளையில்  வரும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் படமாக பார்க்கும் போது அவை பெரிதாக தெரியவில்லை. படத்தின் இறுதியில் ஒரு நல்ல கருத்தை சொல்ல முயற்சித்துள்ளனர்.

குடிகாரனை யாரும் திருத்த முடியாது அவனே நினைத்தால் தான் திருந்த முடியும் போன்ற வசனங்களும் சிறப்பு.

இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசை, கே.எஸ்.பழநியின் ஒளிப்பதிவு, ஜே.எப்.கேஸ்ட்ரோவின் படத்தொகுப்பு ஆகியவை படத்துக்கு பலம்.

ஆண்கள் குடிக்க… அதனால் பெண்கள் படும் பாட்டை சிறப்பாக சொல்லி இருக்கிறது படம். ஆகவே அனைரும் பார்க்க வேண்டிய படம்.

 

The post லோக்கல் சரக்கு விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
திரைப்பட விமர்சனம்: ’ஜெய் விஜயம்’ https://touringtalkies.co/jai-vijayam-review/ Sun, 28 Jan 2024 00:13:26 +0000 https://touringtalkies.co/?p=39487 நாயகன்,  ’ஹலுசினேஷன்’ என்கிற வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அதாவது, நடக்காத சம்பவங்கள் எல்லாம், நிஜமாக நடந்ததாக கற்பனை செய்துக்கொள்வார். அதை நினைத்து பதறுவார். ஆகவே அவரது மனைவி, தங்கை மற்றும் அப்பா ஆகிய குடும்ப  உறுப்பினர்கள், தற்போதைய காலக்கட்டத்தில் இருந்து பத்து வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்வதாக நாயகனை நம்ப வைத்துக்கொண்டு உள்ளனர். நாயகனை வெளியில் எங்கும் அனுப்ப மாட்டார்கள். அப்படி பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்கள். நாயகனுக்கு ஏன் அப்படி ஆனது… இறுதியில் குணம் ஆனாரா […]

The post திரைப்பட விமர்சனம்: ’ஜெய் விஜயம்’ appeared first on Touring Talkies.

]]>
நாயகன்,  ’ஹலுசினேஷன்’ என்கிற வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அதாவது, நடக்காத சம்பவங்கள் எல்லாம், நிஜமாக நடந்ததாக கற்பனை செய்துக்கொள்வார். அதை நினைத்து பதறுவார்.

ஆகவே அவரது மனைவி, தங்கை மற்றும் அப்பா ஆகிய குடும்ப  உறுப்பினர்கள், தற்போதைய காலக்கட்டத்தில் இருந்து பத்து வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்வதாக நாயகனை நம்ப வைத்துக்கொண்டு உள்ளனர். நாயகனை வெளியில் எங்கும் அனுப்ப மாட்டார்கள். அப்படி பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்கள்.

நாயகனுக்கு ஏன் அப்படி ஆனது… இறுதியில் குணம் ஆனாரா என்பதே கதை.

நாயகனாக ஜெய்.  தானே கற்பனை செய்துகொண்டு குழப்பத்துடன் வாழும் கதாபாத்திரம். இதை உணர்ந்து நடித்து உள்ளார்.

நிஜத்தில் நடக்கும் சம்பவங்களைக்கூட, குடும்பத்தினர், கற்பனை என்று சொல்லி அவரை நம்ப வைப்பதும் நடக்கிறது. அப்போதெல்லாம் அவரது தடுமாற்றத்தை  அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது நிலையை உணர்ந்து, அவர் அதிர்ச்சியாகும்போதும் சிறப்பாக நடித்து உள்ளார்.

ஜெய் மனைவியாக வரும் நாயகி அக்‌ஷயா கந்தமுதன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கணவரிடன் காண்பிக்கும் அன்பு, அவரிடம் பொய் சொல்ல வேண்டிய சூழலில் வெளிப்படுத்தும் தர்மசங்கடம் என உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெறுகிறார்.

ஜெய்யின் தங்கை,  அப்பா என புதுமுகங்களாக இருந்தாலும் தேர்ந்த நடிப்பு.

பால் பாண்டியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

சதீஷ்குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன.

ஜெய்க்கு உள்ள வித்தியாசமான நோய்… தவிர அவரைச் சுற்றி நடக்கும் நாடகம் என ஆரம்பம் முதலே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஜெயசதீஷ்வரன் நாகேஸ்வரன்.

இடைவேளைக்குப் பிறகு  மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன. ஆனாலும், சுவாரஸ்யம் குறையவில்லை.

குறைவான பட்ஜெட்டில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரை அளித்திருக்கும் இயக்குநர், தயாரிப்பாளர் பாராட்டுக்குரியவர்களே.

 

The post திரைப்பட விமர்சனம்: ’ஜெய் விஜயம்’ appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: ப்ளூ ஸ்டார் https://touringtalkies.co/review-blue-star/ Fri, 26 Jan 2024 07:56:23 +0000 https://touringtalkies.co/?p=39425 அரக்கோணத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்  ராஜேஷ். அதே ஊரின் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்.  இருவருமே அவரவர் பகுதியின் கிரிக்கெட் டீமுக்கு கேப்டன்களாக இருக்கிறார்கள். சாதி மோதல் காரணமாக, ரஞ்சித்தின் ப்ளூ ஸ்டார் அணியும் ராஜேஷின் ஆல்பா அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை. இந்த நிலையில், ஊர்க்கோவில் திருவிழாவில் இரு அணியினரும் மோத தயாராகிறார்கள். போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ராஜேஷ் பிரபல கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் சிறந்த வீரர்களை அழைத்து வருகிறார். போட்டியில் […]

The post விமர்சனம்: ப்ளூ ஸ்டார் appeared first on Touring Talkies.

]]>
அரக்கோணத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்  ராஜேஷ். அதே ஊரின் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்.  இருவருமே அவரவர் பகுதியின் கிரிக்கெட் டீமுக்கு கேப்டன்களாக இருக்கிறார்கள்.

சாதி மோதல் காரணமாக, ரஞ்சித்தின் ப்ளூ ஸ்டார் அணியும் ராஜேஷின் ஆல்பா அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை.

இந்த நிலையில், ஊர்க்கோவில் திருவிழாவில் இரு அணியினரும் மோத தயாராகிறார்கள். போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ராஜேஷ் பிரபல கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் சிறந்த வீரர்களை அழைத்து வருகிறார். போட்டியில் ரஞ்சித்தின் ப்ளூஸ்டார் அணியினர் தோல்வி அடைகின்றனர்.

மகிழ்ச்சியில் இருக்கும் ராஜேஷ், தான் அழைத்து வந்த வீரர்களுக்கு கூறியபடி பணத்தைக் கொடுக்க அவர்களின் கிளப்புக்கு செல்கிறார். அங்கு, அவர் கடுமையாக அவமானப்படுத்தப்படுகிறார். அப்போது அவருக்காக காலனி பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலரும், ரஞ்சித்தும் களம் இறங்குகிறார்கள்.

இதையடுத்து இருவரும் இணைய… இருவரது அணிகளும் இணைகின்றன.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

 

 

 

போர் தொழில், சபாநாயகன் என முத்திரை பதிக்கும் வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து உள்ளார் அசோக் செல்வன். அந்த வரிசையில் ப்ளூ ஸ்டார் படமும் சேர்ந்திருக்கிறது.

அரக்கோணம் பகுதி இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். அதே போல ஒடுக்கப்பட்ட இனத்தின் ஆக்ரோச இளைஞனாகவே மாறி இருக்கிறார். அவரது உடல் மொழி, பேச்சு அத்தனையும் சிறப்பு.

ராவண கோட்டம் படத்துக்குப் பிறகு இன்னொருமொரு அதிரடி கதாபாத்திரத்தை ஏற்று இருக்கிறார் சாந்தனு.  ஆதிக்க சாதியின இளைஞராக வருகிறார். அறியாமலேயே தனக்குள் ஊன்றி விதைக்கப்பட்ட ஆதிக்க உணர்வை இயல்பாக வெளிப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில், காலனியைச் சேர்ந்த இளைஞன் தனக்காக வந்து நிற்க… அவனும் மனதார இணைகிறார். சிறப்பாக நடித்து இருக்கிறார் சாந்தனு.

 

நாயகி, கீர்த்தி பாண்டியன்  90களின் டீன் ஏஜ் பெண்ணை கண்முன் நிறுத்துகிறார்.  காதலனுடன் செல்லச் சண்டை இடுவது, கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துவது என சிறப்பாக நடித்து உள்ளார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் ”புல்லட் பாபு” கதாப்பாத்திரம் கைத்தட்டல்களை அள்ளுகின்றது. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள குணச்சித்ர கதாப்பாத்திரத்தில் பகவதி பெருமாள் ஸ்கோர் செய்கின்றார்.

அசோக் செல்வன் அம்மாவாக நடித்துள்ள லிசி ஆண்டனியின் காட்சிகளுக்கும் தம்பியாக நடித்துள்ள பிரித்விராஜன் இடையே நடக்கும் சின்னச்சின்ன சண்டைக் காட்சிகளுக்கும் ரசிக்கவைக்கின்றன.

அதே போல ஒவ்வொருவரையுமே தேவையான அளவு நடிக்க வைத்து சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

கோவிந்த் வசந்தாவின் ரயிலின் ஒலிகள் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்துக்கு பலம்.

 

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் இயல்பான காட்சிகளும் வசனங்களும் ரசிக்கவைக்கின்றன.

ஊரும், சேரியும் மோதிக்கொள்ள வேண்டியதே இல்லை.. இணைந்து செயல்பட வேண்டும்  என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனரான ஜெயக்குமார்.

 

 

 

The post விமர்சனம்: ப்ளூ ஸ்டார் appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: சிங்கப்பூர் சலூன் https://touringtalkies.co/review-singapore-saloon/ Fri, 26 Jan 2024 01:49:03 +0000 https://touringtalkies.co/?p=39420 பொறியியல் படித்த இளைஞன் கதிர். இவரது வீட்டுக்குப் பக்கத்தில் முடி திருத்தும் நிலையம் நடத்துகிறார் சாச்சா.  இவரது  ஸ்டைலான முடி திருத்தும் பணியைப் பார்த்து லயித்து, அவரைப் போலவே ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் எனக் கனவு காண்கிறான் இளைஞன் கதிர். இதில் பல தடைகளைச் சந்திக்கிறான். இவற்றை மீறி தனது இலக்கை அடைந்தானா என்பதுதான் கதை. இளைஞன் கதிராகா, ஆர்.ஜே.பாலாஜி தோன்றுகிறார். வழக்கம்போல, டைமிங் காமெடியில் அசத்துகிறார். கதிர் என்ற கதாபாத்திரமாகப் பொருந்துகிறார். நாயகிகி  மீனாக்ஷி சௌத்ரிக்கு […]

The post விமர்சனம்: சிங்கப்பூர் சலூன் appeared first on Touring Talkies.

]]>
பொறியியல் படித்த இளைஞன் கதிர். இவரது வீட்டுக்குப் பக்கத்தில் முடி திருத்தும் நிலையம் நடத்துகிறார் சாச்சா.  இவரது  ஸ்டைலான முடி திருத்தும் பணியைப் பார்த்து லயித்து, அவரைப் போலவே ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் எனக் கனவு காண்கிறான் இளைஞன் கதிர்.

இதில் பல தடைகளைச் சந்திக்கிறான். இவற்றை மீறி தனது இலக்கை அடைந்தானா என்பதுதான் கதை.

இளைஞன் கதிராகா, ஆர்.ஜே.பாலாஜி தோன்றுகிறார். வழக்கம்போல, டைமிங் காமெடியில் அசத்துகிறார். கதிர் என்ற கதாபாத்திரமாகப் பொருந்துகிறார்.

நாயகிகி  மீனாக்ஷி சௌத்ரிக்கு அழுவதைத் தவிரப் பெரிதாக வேலை இல்லை. மற்றபடி சொல்வதற்கு ஏதுமில்லை.

கிஷன் தாஸ், தலைவாசல் விஜய், லால் என  அனைவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்கள்.

சத்யராஜ் அசத்துகிறார். கஞ்சாம்பட்டி மாமனாராக வரும் அவரது அலப்பறைகள் ரசிக்கவைக்கின்றன.  அதிலும் இடைவெளிக்கு முந்தைய பத்து நிமிட அட்ராசிட்டி சிறப்பு.

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். ஜாவேத் ரியாஸின் பின்னணி இசையும் ஓகே.

செல்வகுமாரின் எடிட்டிங் கச்சிதம்.  சலூன் கடையை சிறப்பாக வடிவமைத்து இருக்கிறார்  கலை இயக்குநர் ஜெயச்சந்திரன்.

நகைச்சுவையாக செல்லும்வரை படம் ஓகேதான்.  ஆனால், திடீரென, சீரிஸஸ் மோடுக்கு மாறும்போது திரைக்கதை தள்ளாடுகிறது. வெள்ள பாதிப்பு, வாழ்விடத்தை இழக்கும் மக்கள், பறவைகள் குறித்த விழிப்புணர்வு என ஏகத்துக்கு அட்வைஸ் செய்து போரடிக்கிறார்கள்.  இவற்றில்,  ஏதாவது  ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கலாம்.

குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு,  பல காட்சிகள் அந்நியப்பட்டு நிற்கின்றன.

ஆனாலும் பல நல்ல விசயங்களை, சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என முயற்சித்த இயக்குநர் கோகுலுக்கு பாராட்டுகள்.

 

The post விமர்சனம்: சிங்கப்பூர் சலூன் appeared first on Touring Talkies.

]]>