கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது ஹனுமான் திரைப்படம். இதன் இயக்குநர் பிரசாந்த் வர்மா, தற்போது பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனும் கான்செப்டில் பல படங்களை உருவாக்கி வருகிறார். அதில் அடுத்ததாக புராண அடிப்படையில் உருவாகும் படம் மகாகாளி.

இந்தப் படத்தில் அசுரகுரு சுக்ராச்சாரியர் கதாபாத்திரத்தில் முதன்முறையாக தெலுங்கு சினிமாவில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய் கன்னா.
சமீபத்தில் சைஃப் அலிகான், சன்னி தியோல் போன்ற பல பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய படங்களில் நடித்து வரும்போது, தற்போது அக்ஷய் கன்னாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். தற்போது அவர் நடிக்கும் சுக்ராச்சாரியர் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.