Friday, April 12, 2024

கொரோனா லாக் டவுனால் நிறுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தக் கொரோனா இரண்டாம் அலையினால் ஏற்பட்டிருக்கும் ‘லாக் டவுன்-2’ பல தொலைக்காட்சித் தொடர்களை முடக்கிவிட்டது. அதேபோல் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகளுக்கும் மூடுவிழா நடத்திவிட்டது.

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி சென்னையில் ஈ.வி.பி பிலிம் சிட்டியில்தான் நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 8 நாட்கள் இருந்தாலும் இன்று அல்லது நாளை அதை முடித்துவிடும்படி உத்தரவாகியுள்ளதாம்.

அதை நீடிப்பதற்காக தமிழக அரசிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் கேட்டும் அது நிராகரிக்கப்பட்டுள்ளதாம். கடைசியாக பெப்சியிடம் பேசி மிகப் பெரிய பிராஜெக்ட் என்று கேட்டு இதுநாள்வரையிலும் நீட்டித்து வந்தார்கள்.

உள்ளேயிருந்த போட்டியாளர்களிடத்தில் இது பற்றி எடுத்துச் சொல்லி மொத்தப் பரிசுத் தொகையை மூவருக்கும் சம அளவில் பிரித்துக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்களாம். மேலும் யாரையும் வெளியேற்றாமலேயே சென்ற வாரத்தில் இருந்து எபிசோடை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதோடு உள்ளே இருப்பவர்கள் ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என்பதற்காகாக எந்தவித டாஸ்க்கும் கொடுக்காமல் ப்ரியாகவிட்டுவிட்டார்களாம். மேலும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் மோகன்லால் துபாய் செல்வதாக சொல்லிவிட்டதும் நிகழ்ச்சிக்கு ஒரு பின்னடைவாகிவிட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி.யும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் தோல்விக்கு ஒரு காரணம். மலையாள சீரியல் அளவுக்குக்கூட இதன் டிஆர்பி வரவில்லையாம். சற்றும் பிரபலமில்லாத ஆட்களை வைத்து நடத்துவதால்தான் இந்தத் தோல்வி என்று இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் ஏசியாநெட் தொலைக்காட்சி தனது கண்டனத்தை நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை அப்படியே ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்குக் கொண்டு போகலாம் என்று நினைத்திருந்தார்கள். ஆனால், அதற்குள் தெலுங்கானா மாநிலத்திலும் இந்த லாக் டவுனை கொண்டு வந்ததால் அதுவும் தோல்வியடைந்துவிட்டது.

இதேபோல் பிக்பாஸ் கன்னட நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அதில் பங்கேற்றிருந்த 8 போட்டியாளர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிகழ்ச்சி 71 நாட்கள் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு மங்களம் பாடியதற்கு இன்னொரு காரணம் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த கன்னட சூப்பர் ஸ்டாரான கிச்சா சுதீப்பிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதுதான். அதோடு இந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யும் மிகக் குறைவாகவே இருந்து வந்தது.

இந்தக் குழப்பத்தில் தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் லாக் டவுன் அறிவித்துவிட்டதால் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துவிட்டார்கள் தயாரிப்பு நிறுவனத்தினர்.

- Advertisement -

Read more

Local News