Thursday, April 11, 2024

விமர்சனம்: அயலி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு கிராமத்தில், ‘பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது: உடனடியாகத் திருமணம் செய்துவிட வேண்டும்’ என்று கட்டுப்பாடு பல நூறு ஆண்டுகளாக தொடர்கிறது.இந்த நிலையில், 1990ல் அந்த கிராமத்தில் இருந்து பள்ளிக்குச் செல்லும் தமிழ்ச்செல்வி தான் எப்படியாவது மருத்துவம் பயில வேண்டும் என்று தீர்மானிக்கிறாள். அவளது எண்ணம் ஈடோறியதா என்பதுதான் கதை.
சிறுதெய்வ வழிபாடுகளை சுவராஸ்யமாக சொல்லி, கதைக்குள் செல்கிறது படம். ஆகவே  ஒவ்வொரு காட்சியும் மனதிற்குள் புகுந்துவிடுகின்றன.
தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபிநட்சத்திரா, அவருடைய அம்மாவாக வரும் அனுமோல் ஆகிய இருவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
அலட்சியப் புன்னகையுடன் ஒவ்வொரு தடையையும் தாண்டி வரும் அபியும், மிகப்பெரிய விசயத்தை அநாயசமாக மறைக்கும் மகளைப் பார்த்து வியந்து இரசிக்கும் அனுமோலும் ஈர்க்கிறார்கள்.
தலைமையாசிரியராக நடித்திருக்கும் காயத்ரி, உதவி தலைமையாசிரியாக நடித்திருக்கும் டிஎஸ்ஆர்.,   தமிழ்ச்செல்வியின் அப்பா அருவிமதன், வில்லன் லிங்கா, அவருடைய அப்பா சிங்கம்புலி என அனைத்து பாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.
ஊர்ப்பஞ்சாயத்துக்காட்சியில் பிரகதீஸ்வரன், செருப்பை ஓங்கி தரையில் அடிக்கும் காட்சி சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.
ரேவாவின் இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன. பின்னணி இசையும் கவர்கின்றது.
ராம்ஜியின் ஒளிப்பதிவு கிராமத்து காட்சிகளை – மனிதர்களை கண் முன் நிறுத்துகிறது.
எழுதி இயக்கியிருக்கும் முத்துக்குமார், சமுதாயத்துக்கு அவசியமான கருத்தை, ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார்.
ஜீ 5 இணையத்தில் அனைவரும் பார்க்கவேண்டிய தொடர்.

- Advertisement -

Read more

Local News