Friday, April 12, 2024

“மினி தியேட்டர்களுக்கு அனுமதி கொடுங்கள்…” – தயாரிப்பாளர் லிப்ரா சந்திரசேகர் கோரிக்கை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா சந்திரசேகர் தமிழக அரசுக்கு தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு. படப்பிடிப்பு நடத்த குறைந்தக் கட்டணம், திரையரங்குகளுக்கு மின் கட்டண ரத்து, மினி தியேட்டர்களுக்கு அனுமதி உட்பட பல  கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு, சென்னையில் படப்பிடிப்புகளுக்கு குறைந்த கட்டணம் என கலைஞர் அவர்கள் கொண்டு வந்த முத்தான திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.

2. கொரோனா காலத்தில் திரையரங்குகள் இயங்காததால், அவற்றின் மின்சாரத் தொகை மற்றும் சொத்துவரியை தள்ளுபடி செய்தோ அல்லது அவற்றில் சலுகை அளித்தோ திரையரங்க உரிமையாளர்களின் சுமையை குறைக்க வேண்டும்.

3. அடுத்தடுத்த கட்ட தளர்வுகளின்போது திரையரங்குகளை திறந்து, லட்சக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்.

4. கொரோனா பாதிப்புகள் மேலும் சரிவடையத் துவங்கியதும், கட்டுப்பாடுகளுடன் கூடிய படப்பிடிப்புகளை அனுமதித்து, திரையுலகத் தொழிலாளர்களை காப்பாற்றிட வேண்டும்.

5. பெரும் படங்கள், ஓடிடி தளங்கள் என பல போட்டிகளுக்கு மத்தியில் திரைக்கு வர சிரமப்படும் மிக மிக அவசரம் போன்ற சமூக அக்கறை மிக்க திரைப்படங்களை வெளியிட, மாநிலமெங்கும் மினி திரையரங்குகளை அமைத்து, சிறு படங்களையும் படைப்பாளிகளையும் தயாரிப்பாளர்களையும் ஊக்கப்படுத்தவும், அதன்மூலம் நல்ல திரைப்படங்கள் தொடர்ந்து உருவாகவும் உதவிட வேண்டும்.

வாக்குறுதியளித்த திட்டங்கள் மட்டுமல்லாமல், சொல்லாத திட்டங்களையும் அறிவித்து சிக்ஸர் அடிக்கும் உங்கள் ஆட்சியில், சோர்ந்து கிடக்கும் திரைப்பட உலகத்திற்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு புத்துணர்ச்சி பிறக்குமென்று மனதார நம்புகிறேன்..” என்று தெரிவித்துள்ளார் லிப்ரா சந்திரசேகரன்.

- Advertisement -

Read more

Local News