இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்து புகழ் பெற்றவர் வசுந்தரா. அதற்கு முன்பு அதிசயா என்ற பெயரில் வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் படங்களில் நடித்தார். இதுதவிர பக்ரீத், தலைக்கூத்தல் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்தார். கடந்த வருட இறுதியில் இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இனி பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்த மாடர்னான கொஞ்சம் கெத்தான, அதே சமயம் கொஞ்சம் நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரங்களில் நடிக்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். இதற்காக என்னுடைய ஹேர்ஸ்டைலில் கூட சில மாறுதல்களை செய்து இருக்கிறேன் என கூறியுள்ளார் வசுந்தரா.
