தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தற்போது தனது 157வது திரைப்படமான ‘மனா சங்கரா வரபிரசாத்த் காரு’வில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும், கேத்ரின் தெரசா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். மேலும், ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிகர் வெங்கடேஷ் இணைந்துள்ளார்.

இந்த திரைப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகப்பெரிய வெளியீடாக திரைக்கு வர உள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் கவர்ச்சியான ஒரு ஸ்பெஷல் சாங்ஒன்று இடம்பெறுகிறது. அந்த பாடலில் நடனமாட நடிகை தமன்னாவை சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
முன்பும் தமன்னா – அனில் ரவிபுடி கூட்டணி பல படங்களில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.அவர் இயக்கிய F2, F3 படங்களில் தமன்னா நாயகியாக நடித்திருந்தார். மேலும், சரிலேறு நீக்கேவரு படத்தில் தமன்னா சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருந்தார். மேலும் இந்த புதிய சிறப்பு பாடலிலும் தமன்னா இணைவது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

