நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, சில வருடங்களில் கருத்து வேறுபாடால் 2021ல் பிரிந்தார். நடிகை சமந்தா, ‘பேமிலி மேன், சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர்களில் நடித்தார். அப்போது, அதன் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் சமந்தாவுக்கு நட்பு ஏற்பட்டது.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பொதுவெளியில் இருவரும் ஜோடியாக திரிவது, காதல் கிசுகிசுக்களை உண்மையாக்கின.ராஜ் நிடிமொருவும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். ஸ்யாமலி டே என்பவரை திருமணம் செய்து 2022ல் விவாகரத்து பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமந்தா – ராஜ் ஜோடி, இன்று (டிச.1) கோவை ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்தி வெளியானது. இந்தநிலையில் திருமண புகைப்படங்களை நடிகை சமந்தா வெளியிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களது திருமணம் கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி ஆலயத்தில் இன்று காலை நடைப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

