‘ஒரு நாள் ஒரு கனவு’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை ரம்யா நம்பீசன். அதன் பிறகு விஜய் சேதுபதி ஜோடியாக பீட்சா, சேதுபதி, சைத்தான், சீதக்காதி, நட்புன்னா என்னன்னு தெரியுமா? உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதோடு, பல படங்களில் இவர் பின்னணியும் பாடியிருக்கிறார். இந்த நிலையில், சேலத்தில் நடைபெற்ற ஒரு மாரியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளார் ரம்யா நம்பீசன். அப்போது நடந்த கலைஞர்களுடன் இணைந்து பாடல்கள் பாடியவர் நடனமும் ஆடி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
