நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அமல் பேபி கதாபாத்திரத்தில் வடமாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். சரண் இயக்கிய ஜெமினி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் வெற்றி கண்டது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற ‘ஓ போடு’ பாடல் அனைவரையும் ஆடவைத்தது. இப்படத்தின் கதை, பாடல் ஆகிய அனைத்தும் சிறப்பாக அமைந்ததால் கிரணுக்கு முதல் படமே வெற்றியை ஈட்டித் தந்தது.
ஜெமினிக்கு பிறகு, கிரண் சுந்தர் சி இயக்கிய ‘அன்பே சிவம்’ படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்தார். அதே போன்று அஜித் இரட்டை வேடத்தில் நடித்த ‘வில்லன்’ படத்தில் அவரது ஜோடியாகவும் நடித்தார். பின்னர் ‘வின்னர்’ படத்தில் பிரசாந்துடன் இணைந்து நடித்தார். கிரண் நடித்த அனைத்து படங்களும் வெற்றி கண்ட நிலையில், அவரது படங்கள் தொடர்ந்த அளவில் வரலாம் என எதிர்பார்த்தபோது அவர் திடீரென சினிமாவில் இருந்து பின் வாங்கினார்.
கிரணுக்கு தற்போது படவாய்ப்பு இல்லாததால், தொடர்ந்து இணையத்தில் சில கவர்ச்சிகரமான மற்றும் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. இதனால் ரசிகர்களில் சிலர் லைக்குகளை குவித்தாலும், சிலர் அதனை கண்டித்து விமர்சிக்கின்றனர்.