மங்களூரை சேர்ந்த நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். உப்பென்னா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை.

தமிழில் தற்போது அவர் கார்த்திக்கு ஜோடியாக ‘வா வாத்தியார்’, பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘எல்.ஐ.கே’, ரவி மோகனுக்கு ஜோடியாக ‘ஜீனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் முதல் இரண்டு படங்கள் இம்மாதமே வெளியாக உள்ளன.
இந்த படங்கள் மூலம் வெற்றி பெற்று தமிழிலும் தனக்கான இடத்தை பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது. முன்பை விட ஓரளவு தமிழைப் பேசவும் அவர் தற்போது கற்றுக்கொண்டிருக்கிறார்.இதேபோல், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் பாக்யஸ்ரீ மற்றும் ஸ்ரீலீலாவும், 2026ஆம் ஆண்டில் தமிழில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான படங்களில் நடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

