Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படம் விஜய்யின் 65-வது படமாகும். விஜய்க்கு நாளை பிறந்த நாள் என்பதால் அதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று நேற்றைக்கே அறிவித்திருந்தார்கள்.

அதன்படி இன்றைக்கு இந்தத் தலைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தப் படத்திற்கு ‘டார்கெட்’ என்று பெயர் வைக்கப் போவதாக சில செய்திகளை இணையத்தில் கசிய விட்டிருந்தார்கள். ஆனால் இப்போது மாறுபட்ட ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.

தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’, ‘புலி’, ‘தெறி’, ‘பைரவா’, ‘மெர்சல்’, ‘சர்க்கார்’, ‘பிகில்’, ‘மாஸ்டர்’ என்று கவன ஈர்ப்புடன் கூடிய பெயர்களையே கடந்த சில படங்களுக்கு சூட்டி வந்த விஜய், இந்தப் படத்திலும் அதே மாதிரியான பெயரை ஆனால் ஆங்கிலத்தில் அப்படியே வைத்திருக்கிறார். ‘பீஸ்ட்’ என்றால் தமிழில் ‘மிருகம்’ என்று அர்த்தம். ‘மிருகம்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஆதி நடிப்பில் ஒரு படம் வெளியாகியிருப்பதால் அதே தலைப்பை வைக்க விருப்பமில்லாமல் ஆங்கிலப் பெயரையே வைத்து விட்டார்கள்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், கலை இயக்கம் – கிரண், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – ஜானி, உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், வி.சாய், ஒப்பனை – பி.நாகராஜன், வி.எஃப்.எக்ஸ் சூப்பர்வைஸர் – அற்புதராஜ், மக்கள் தொடர்பு – ரியாஸ் அஹமது, புகைப்படங்கள் – மானெக்சா, விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, நிர்வாகத் தயாரிப்பு – ஆர்.உதயகுமார், எழுத்து, இயக்கம் – நெல்சன் திலீப்குமார்.

இந்தப் பெயர் விஜய் ரசிகர்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதா, பிடிக்கிறதா.. பிடிக்கவில்லையா என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரியும்.

- Advertisement -

Read more

Local News