Friday, April 12, 2024

விஜய்யின் 66-வது படத்தைத் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் தற்போது நடிக்கவிருக்கும் அவருடைய 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கப் போகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இதற்கடுத்த 66-வது திரைப்படத்தின் தயாரிப்பாளரையும் விஜய் இப்போதே முடிவு செய்துவிட்டாராம். அந்த நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ்.

மெர்சல் படத்தைத் தயாரித்த இராம.நாராயணின் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் முரளி ராமசாமிதான் அந்த அதிர்ஷ்டக்காரத் தயாரிப்பாளர்.

இவர் ஏற்கெனவே தயாரித்த ‘மெர்சல்’ திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றெடுத்தாலும் அந்தப் படத்தின் இயக்குநரான அட்லீயின் திட்டமிடாத பணிகளாலும், ஷூட்டிங் நாட்களை அதிகப்படுத்தியதாலும் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சம்பாதித்தார் முரளி ராமசாமி.

‘மெர்சல்’ படத்தின் வெளியீட்டுக்குப் பின்பு அவருடைய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட இன்சால்வன்சி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்திருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸுக்கு வாழ்க்கைக் கொடுப்பதற்காக இன்னொரு வாய்ப்பினைத் தந்திருக்கிறார் நடிகர் விஜய்.

இதற்கிடையில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷே நடித்து, இயக்குவதாக இருந்து பின்பு நின்று போன படத்தையும் மீண்டும் துவக்குவதற்கான வேலைகளும் தற்போது மும்முரமாக நடந்து வருகிறதாம்.

- Advertisement -

Read more

Local News